UAN Activation | இதோ ரெண்டே நிமிஷத்துல பண்ணிடலாம்! எப்படினு பாருங்க!
உங்கள் வருங்கால நிதி (PF) கணக்கை வீட்டிலிருந்தே எளிதாகச் செயல்படுத்துங்கள். இந்தக் கட்டுரையில், உங்கள் PF இருப்பு மற்றும் பிற முக்கியத் தகவல்களை எளிதாகக் கண்காணிக்க, UAN ஐச் செயல்படுத்துவதற்கான படிப்படிப்படியான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
UAN Activation | ஏறக்குறையா எல்லா வேலைக்குச் செல்பவர்களுக்கும் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். இதில் உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியும், நிறுவனத்தின் பங்களிப்பும் சேர்ந்து PF கணக்கில் சேர்க்கப்படும், இது ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை நீங்கள் வீட்டிலிருந்தே சரிபார்க்கலாம். இதற்கு மிகவும் முக்கியமானது யுனிவர்சல் கணக்கு எண்(Univarsal Accout Number - UAN). PF கணக்கு தொடர்பான பணிகளை ஆன்லைனில் முடிக்க UAN எண் மிகவும் அவசியம். ஆனால் இதற்கு உங்கள் UAN செயல்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.
எளிய வழிமுறைகளைப் பின்பற்றி UAN ஐ செயல்படுத்துங்கள்
UAN ஐ செயல்படுத்த EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
பின்னர் சர்வீஸ் ஆக்ஷனில் 'For Employees' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு சர்வீஸ் பட்டியலில் இருந்து 'Member UAN' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
பின்னர் புதிய விண்டோவில் 'Activate UAN' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்கள் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணுடன் உங்கள் UAN ஐ உள்ளிடவும்.
பின்னர் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP பெற 'Get OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் OTP ஐ உள்ளிட்டு 'Validate OTP and Activate UAN' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைலுக்கு ஒரு கடவுச்சொல் வரும், அதை நீங்கள் உள்நுழைவதற்குப் பயன்படுத்தலாம்.
இதன் பிறகு உங்கள் UAN எண் செயல்படுத்தப்படும்.
EPF பாஸ்புக் பெறுவது எப்படி?
EPF பாஸ்புக்கில் PF கணக்கு தொடர்பான பங்களிப்பு, வட்டி மற்றும் பணம் திரும்பப் பெறுதல் போன்ற முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன. அதன் டிஜிட்டல் பாஸ்புக்கைப் பயன்படுத்தி PF இருப்பு, நிறுவனம் எவ்வளவு பணம் டெபாசிட் செய்கிறது மற்றும் கிடைக்கும் வட்டியைக் கண்காணிக்கலாம்.
வரலாறு காணாத உச்சம் தொட்ட அன்னியச் செலாவணி கையிருப்பு! இறக்குமதி பற்றி கவலையே வேண்டாம்!!