HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்!
HDFC வங்கியில் புதிய விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும். வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இதனை தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது ஆகும்.

HDFC வங்கி விதிகள்
புதிய விதிகளில் மிகப் பெரிய மாற்றம் TRV (Total Relationship Value) தொடர்பானது. இதன் படி, வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து வைத்திருக்கும் கணக்குகள், வைப்புகள், முதலீடுகள், காப்பீடு உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதன் மூலம் அந்த வாடிக்கையாளர் Imperia Serviceக்கு தகுதி பெறுவார்.
வங்கி புதிய நிபந்தனைகள்
TRV-யில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, நிரந்தர வைப்பு (FD), வங்கியின் மூலம் வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட், முதலீடுகள், டீமாட் பங்குகள் மதிப்பின் 20 சதவீதம், ரீடெயில் கடனின் 20 சதவீதம் மற்றும் காப்பீட்டு ப்ரீமியம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜூன் 30, 2025க்குப் பிறகு சேரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் பழைய விதிகளும் தொடரும். காலாண்டு தோறும் நடப்பு கணக்கில் ரூ.15 லட்சம் சராசரி இருப்பு வைத்திருக்கலாம்.
HDFC Imperia சலுகைகள்
அல்லது சேமிப்பு கணக்கில் மாதாந்திர ரூ.10 லட்சம் சராசரி இருப்பு இருந்தாலோ, சேமிப்பு-நடப்பு-நிரந்தர வைப்பு ஆகியவற்றில் மொத்தம் ரூ.30 லட்சம் இருப்பு இருந்தாலோ Imperia-வில் சேரலாம். மேலும், மாத சம்பளம் ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, HDFC நிறுவன சம்பளக் கணக்கு வைத்திருந்தாலோ கூட இந்த திட்டத்தில் சேர முடியும். HDFC வங்கியின் Imperia Service தொடர்பான சில புதிய விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
வங்கி இலவச சேவைகள்
இந்த சேவை வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கானது என்பதால், அவர்கள் பல சிறப்பு சலுகைகளையும் சேவைகளையும் இலவசமாக பெறுகின்றனர். இம்பீரியா வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகள் முற்றிலும் இலவசம். கிளைகளுக்கிடையிலான நிதி பரிமாற்றம், காசோலை நிறுத்த கட்டணம், பழைய கணக்கு விவரங்கள், வட்டி/இருப்பு சான்றிதழ், முகவரி/கையொப்ப சரிபார்ப்பு போன்றவற்றுக்கான கட்டணம் இல்லை. இதன் மூலம் HDFC வங்கி, தனது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.