MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2 கிரெடிட் கார்டுகள் இருக்கா.?! அப்ப இதை செய்யாட்டி சிக்கல்தான் உங்களுக்கு.! கடன் கழுத்தை நெரிக்கும்.!

2 கிரெடிட் கார்டுகள் இருக்கா.?! அப்ப இதை செய்யாட்டி சிக்கல்தான் உங்களுக்கு.! கடன் கழுத்தை நெரிக்கும்.!

பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது நிதி சுதந்திரத்திற்கு உதவும் அதே நேரம், சரியாக நிர்வகிக்காவிட்டால் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். பில் கட்டும் ஒழுக்கம், புதிய கார்டுகளை வாங்குவதில் கவனம் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்கலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 05 2025, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அவசரத்திறஅகு உதவும் ஆதார் கார்டுகள்
Image Credit : Gemini

அவசரத்திறஅகு உதவும் ஆதார் கார்டுகள்

ஆதார் கார்டு இல்லாதவங்க கிட்ட கூட கிரெடிட் கார்டு இருக்கு இப்போ.!பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது உங்கள் நிதி சுதந்திரத்திற்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், அவற்றை சரியான முறையில் நிர்வகிக்காமல் விட்டால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரையே பாதிக்கக்கூடும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட சில நுட்பங்களை பின்பற்றி கிரெடிட் ஸ்கோரை பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
கிரெடிட் யூட்டிலைசேஷன்
Image Credit : Freepik

கிரெடிட் யூட்டிலைசேஷன்

கிரெடிட் ஸ்கோருக்கு மிக முக்கியமான காரணி தான் Credit Utilisation Ratio. இது உங்கள் பயன்படுத்தும் கடனின் அளவையும், உங்களிடம் கிடைக்கும் மொத்த கிரெடிட்டின் அளவையும் ஒப்பிடுகிறது. இது 30% க்கும் குறைவாக இருந்தால், உங்கள் நிதி ஒழுக்கத்தை காட்டும். எடுத்துக்காட்டாக, ரூ1 லட்சம் வரம்பு இருந்தால், ரூ.30,000 க்கும் கீழ் வைத்தாலே போதும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு சாதகமாக இருக்கும்.

38
பில் கட்டும் ஒழுக்கம்
Image Credit : Phonepe Website

பில் கட்டும் ஒழுக்கம்

ஒவ்வொரு கார்டிற்குமான Due Date களை தவறாமல் கவனித்தல் மிக முக்கியம். கட்டணம் செலுத்துவதை தவறவிட்டால், அது நேரடியாக உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். Auto Debit வசதிகளை பயன்படுத்தி, குறைந்தபட்ச கட்டணத்தையாவது தாமதமின்றி செலுத்தலாம். தவிர, ஒவ்வொரு மாதமும் உங்கள் statement ஐ சரிபார்த்து தவறுகள் உள்ளதா என்று பாருங்கள்.

48
புதிய கார்டுகளை வாங்கும் போது கவனம்
Image Credit : Phonepe Website

புதிய கார்டுகளை வாங்கும் போது கவனம்

பலர் விரைவில் பல புதிய கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது தவறான பழக்கமாகும். ஒவ்வொரு புதிய கார்டுக்கும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மீது தாக்கம் ஏற்படும். மேலும், உங்கள் நம்பகத்தன்மையை வங்கி சந்தேகிக்கலாம். எனவே, தேவைக்கு ஏற்ப சில நாட்களுக்கு இடைவெளி விட்டு புதிய கார்டுகளை வாங்குவது நல்லது.

58
பழைய கார்டுகளை வைத்திருக்க வேண்டுமா?
Image Credit : Gemini

பழைய கார்டுகளை வைத்திருக்க வேண்டுமா?

கிரெடிட் வரலாறு என்பது உங்கள் ஸ்கோரின் முக்கிய அங்கம். நீங்கள் எந்த அளவுக்கு நீண்ட காலமாக கிரெடிட் பயன்படுத்துகிறீர்கள் என்பது, நம்பகத்தன்மையின் அடையாளம். எனவே, பழைய கார்டுகளை உபயோகிக்காமலிருந்தாலும், அவற்றை மூடாமல் வைத்திருப்பது நன்மை தரும். ஆனால், அவற்றில் உயர்ந்த வருடாந்த கட்டணங்கள் இருந்தால் கவனிக்க வேண்டும்.

68
கிரெடிட் கார்டு ஒதுக்கீடு – செலவுப் பிளான்
Image Credit : Gemini

கிரெடிட் கார்டு ஒதுக்கீடு – செலவுப் பிளான்

ஒவ்வொரு கிரெடிட் கார்டையும் தனித்தனியாக ஒரு நோக்கத்திற்காக ஒதுக்குங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு கார்டை grocery க்கு, மற்றொன்றை பயணங்களுக்கு, வேறொன்றை ஆன்லைன் பில்ல்களுக்கு பயன்படுத்தலாம். இது உங்கள் செலவுகளை ஒழுங்குபடுத்தவும், விருதுகள்/ரிவார்டுகளையும் முழுமையாக பயன்படுத்தவும் உதவும்.

78
வட்டி விகிதம் குறைக்க – Balance Transfer
Image Credit : our own

வட்டி விகிதம் குறைக்க – Balance Transfer

உங்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக வட்டி செலுத்துகிறீர்கள் என்றால், balance transfer வசதியை பயன்படுத்தலாம். குறைந்த வட்டியுள்ள புதிய கார்டுக்கு பழையக் கடனை மாற்றுவது நல்லது. ஆனால், அந்த கடனை சரியாகத் திட்டமிட்டு அடைப்பது அவசியம்.

88
நிதி ஆலோசனை – தேவைப்பட்டால் உதவி பெறுங்கள்
Image Credit : our own

நிதி ஆலோசனை – தேவைப்பட்டால் உதவி பெறுங்கள்

நீங்கள் ஏற்கனவே கடனில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால், பயப்படவேண்டாம். நிதி ஆலோசகர் (financial advisor) அல்லது கடன் ஆலோசகர் (debt counsellor) யின் உதவியை பெறலாம். அவர்கள் உங்கள் வருமானத்திற்கேற்ப கட்டுப்பாடுடன் உங்கள் கிரெடிட் கார்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை திட்டமிட உதவுவர். பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது குற்றமல்ல; அவற்றை எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதே முக்கியம். பில் கட்டும் ஒழுக்கம், செலவுகளை ஒழுங்குபடுத்தல், தேவையற்ற புதிய கார்டுகளை தவிர்த்தல் போன்ற எளிய வழிமுறைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்கும். நிதி ஒழுக்கத்தை மேற்கொண்டு, பணவியல் சுதந்திரத்தை அடையலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கடன் அட்டை
வங்கி விதிகள்
வணிகம்
முதலீடு
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(19.1 ov)252/6
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(52.0 ov) 329 & 151/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image2
Dindigul Thalappakatti : வெற்றிலை பாக்குக் கடையில் தொடங்கிய பயணம்! இன்று ₹1000 கோடி சாம்ராஜ்யம்!
Recommended image3
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
ரூ.2,000 பணம் வங்கியில் கிரெடிட் ஆகப்போகுது.. பெறுவது எப்படி?
Recommended image2
கிரெடிட் கார்டு கட்டணம்.! எப்படியெல்லாம் வசூலிக்குறாங்க பாருங்க.! கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved