- Home
- Business
- கிரெடிட் கார்டு கட்டணம்.! எப்படியெல்லாம் வசூலிக்குறாங்க பாருங்க.! கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
கிரெடிட் கார்டு கட்டணம்.! எப்படியெல்லாம் வசூலிக்குறாங்க பாருங்க.! கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
கிரெடிட் கார்டுகள் வசதியானவை, ஆனால் மறைமுகக் கட்டணங்கள் நிறைந்தவை. ஜாயினிங் பீஸ், ஆண்டு கட்டணம் தாமத கட்டணம், ஓவர்லிமிட் கட்டணம், வெளிநாட்டு் கட்டணம், மற்றும் அதிக வட்டி எனப் பல கட்டணங்கள் உங்களை கடன் சுழற்சியில் சிக்க வைக்கலாம்.

தெரிந்த விஷயம் தெரியாத கட்டணம்
கிரெடிட் கார்டு என்பது பணம் இல்லாத நேரத்தில் உடனடியாக செலவழிக்க உதவும் ஒரு வசதியான கருவி. ஆனால், இதைப் பயன்படுத்தும் போது பல வகையான கட்டணங்கள் மறைமுகமாக வசூலிக்கப்படுகின்றன. இந்த கட்டணங்களைப் புரிந்துகொள்ளாமல் பயன்படுத்தினால், நம்மே நம்மை கடன் சுமையில் சிக்கவைத்துக்கொள்வோம்.
சேர்வதற்கான கட்டணம்
முதலில், ஜாயினிங் ஃபீஸ் என்பது கார்டு முதன்முறையாக கிடைக்கும் போது கட்ட வேண்டிய கட்டணம். சில கார்டுகளில் இது இலவசமாக இருக்கும், ஆனால் சிலவற்றில் ₹250 முதல் ₹50,000 வரை வரலாம். இதற்கு அடுத்ததாக வரும் ஆனுவல் ஃபீ,ஸ் வருடத்திற்கு ஒருமுறை கட்டவேண்டிய கட்டணம். இது கார்டை பராமரிக்க வசூலிக்கப்படுகிறது.
வட்டிக்கு மேல் வட்டி
பண பரிமாற்ற கட்டணம் என்பது சில வகை செலவுகளுக்கு மட்டும் விதிக்கப்படும் கட்டணம். உதாரணத்திற்கு, வீட்டுவாடகை, மின்சாரம், போன் பேமெண்ட் போடும்போது, கட்டணம் வசூலிக்கப்படும். இது 1% வரை இருக்கலாம். கார்டு மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது, உடனடியாக 2.5%-3% வரை கட்டணமும், தினமும் வட்டியும் கட்ட வேண்டி இருக்கும். எனவே பணம் எடுப்பது சரியான வழி அல்ல.
சரியான தேதியில் பில் கட்ட வேண்டும்
ரிவார்ட் புள்ளிகள் (reward points) பயன்படுத்தும்போதும் ₹99 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இது பலருக்கு தெரியாமல் செலவாகி விடும். நமது கிரெடிட் கார்டு பில்லை தவறாமல் கட்ட வேண்டும். இல்லையெனில் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் (நம்பகத் தன்மை மதிப்பெண்) பாதிக்கும்.
லிமிட்டை தாண்ட வேண்டாம்
கார்டில் இருக்கும் limit-ஐ மீறி செலவழித்தால், அதற்கும் கூடுதலாக ஓவர்லிமிட் கட்டணம் வசூலிக்கப்படும். இது 2%-3% வரை இருக்கலாம். வெளிநாட்டு வாங்கல் செய்தால் 1%-3.5% வரை அதிக கட்டணம் சேர்க்கப்படும். சில விசேஷ கார்டுகள் இதில் விலக்களிக்கலாம். முக்கியமாக, உங்கள் கிரெடிட் கார்டு பிலில் முழுமையாக பணம் செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள தொகையில் அதிக வட்டி வசூலிக்கப்படும். இது ஆண்டுக்கு 15%-55% வரை இருக்கலாம்.
புரிஞ்சுகிட்டா பிரச்சினை இல்லை
சுருக்கமாகச் சொன்னால், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சிரமம் இல்லாமல் இருப்பதற்காக. ஆனால் கட்டணங்களை புரிந்து கொண்டு திட்டமிட்டு பயன்படுத்தினால் தான் நஷ்டம் இல்லாமல் வசதியை அனுபவிக்க முடியும். இல்லையெனில், இவை நம்மை கடன் சுழற்சிக்குள் இழுத்துச் செல்லும்.