- Home
- Business
- GST 2.0: டிவி முதல் கார் வரை! நாளை முதல் எந்தெந்த பொருட்கள் விலை குறையும்? முழு லிஸ்ட் இதோ!
GST 2.0: டிவி முதல் கார் வரை! நாளை முதல் எந்தெந்த பொருட்கள் விலை குறையும்? முழு லிஸ்ட் இதோ!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதில் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? என்னென்ன பொருட்களின் விலை அதிகரிக்கும்? என்பது குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

GST 2.0 Reforms
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டியில் இனிமேல் 4 அடுக்குகள் இருக்காது. இனிமேல் ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% மட்டுமே இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. என்னென்ன பொருட்களின் விலை குறைந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?
அதாவது கன்டென்ஸ்ட் பால், வெண்ணெய், நெய், வெண்ணெய். உலர்ந்த பழங்கள், கோகோ, சர்க்கரை மிட்டாய்கள், பாஸ்தா, காபி சாறுகள், ஐஸ் கிரீம் மற்றும் பேக்கரி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறையும். இதே போல் பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளில், பன்னீர், பீஸ்ஸா ரொட்டி, காக்கிரா, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகியவற்றுக்கு வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது.
டிவி, சோப்பு, டூத் பேஸ்ட் விலை குறையும்
மேலும் டிவி, ப்ரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விலையும் குறையும். இது தவிர சோப்பு, ஷாம்பு, ஹேர் ஆயில், டூத் பேஸ்ட், டால்கம் பவுடர், ஆடைகள் மற்றும் காலணிகளின் விலையும் குறைகிறது. இதே போல் பென்சில் ஷார்ப்னர்கள், வரைபடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், கணித பாக்ஸ்கள் ஆகியவை விலையும் குறைகிறது.
சைக்கிள்கள், பைக்குகள், கார்கள்
மருத்துவ பொருட்களை பொறுத்தவரை எக்ஸ்ரே ஃபிலிம், ரப்பர் கையுறைகள் மற்றும் பேபி ஃபீடிங் பாட்டில்கள் ஆகியவற்றின் விலையும், பைகள், குடைகள், பொம்மைகள், சிமெண்ட் விலையும் குறைகிறது. மேலும் சைக்கிள்கள், பைக்குகள், சிறிய ரக கார்கள், மூன்று சக்கர வாகனங்களின் விலையும் குறையும். அதே வேளையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் சில பொருட்களின் விலை அதிகரிக்கும்.
என்னென்ன பொருட்கள் விலை அதிகரிக்கும்?
பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விலை அதிகரிக்கும். ரூ.2500க்கு மேல் மதிப்புள்ள ஆடைகள், சில கட்டிட பொருட்கள், சில வாசனை பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.