புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஜெட் வேகத்தில் ஏறுது! மக்கள் கவலை!
திருமண சீசன், நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,360 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை இன்று
திருமண சீசன், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ஆயிரக்கணக்கில் உயர்வை பதிவு செய்துள்ளது.
சென்னை தங்கம் விலை
கடந்த மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஒரே நேரத்தில் ஏற்றத்தைக் கண்டது. வாரத்தின் தொடக்க நாளிலேயே ஒரு பவுன் ரூ.77,640க்கு விற்கப்பட்டது. அதற்கு முந்தைய நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.680 உயர்ந்தது. இதனால் தினமும் புதிய உச்சத்தை எட்டும் நிலை உருவாகி, நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் குழப்பத்துடன் இருந்தனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை
நேற்று தங்கம் விலையில் உயர்வு பதிவானது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,725க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் புதிய வரலாற்று உச்சத்தையும் தொட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,360 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உச்சம் தங்கம்
வெள்ளி விலையும் தங்கத்தைப் போலவே ஏற்றத்தைத் தொடர்ந்து வருகிறது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.137க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,36,000க்கும் விற்கப்பட்டது. பண்டிகை நாட்கள் நெருங்கும் சூழலில் வெள்ளி வாங்குவதற்கு கூடுதல் செலவு உள்ளது.
வெள்ளி விலை
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமத்திற்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440க்கும் விற்பனையாகிறது. ஆனால் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137க்கு விற்கப்படுகிறது.