இல்லத்தரசிகள் இனி தங்கம் வாங்க முடியாது.. ஷாக் கொடுக்கும் தங்க விலை
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பண்டிகை கால தேவையின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு நகை வாங்குவது சிரமமாக உள்ளது.

தங்கம் விலை உயர்வு
உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தல், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகள் தங்க விலையை அதிகரிக்கச் செய்துள்ளன. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகமானோர் தேர்வு செய்வதால், அதன் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை இன்று
தமிழகத்தில் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் காரணமாக நகைக்கடைகள் தேவை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நகை வியாபாரிகள் கூறுவதாவது, ஏற்கனவே உயர்ந்துள்ள விலையில் மேலும் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சாதாரண குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவது கடினமாக வருகிறது.
இன்று தங்கம் விலை அப்டேட்
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.9,620, சவரனுக்கு ரூ.76,960 இருந்தது. ஆனால் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று மீண்டும் உயர்ந்து கிராமத்திற்கு ரூ.9,705, சவரனுக்கு ரூ.77,640 ஆக உயர்ந்தது. அதே நாளில் 18 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.8,030, சவரன் ரூ.64,240 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் சவரனுக்கு ரூ.3,700க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்று சென்னையில் தங்க விலை மேலும் உயர்வு கண்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.77,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ.9,725 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,609 க்கும், சவரனுக்கு ரூ.84,872 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதே சமயம், 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,045 மற்றும் ஒரு சவரன் ரூ.64,360 என உள்ளது. தங்கத்துடன், வெள்ளி விலையும் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.136.10, கிலோவுக்கு ரூ.1,36,100 விற்பனை செய்யப்படுகிறது.