Gold Rate Today (நவம்பர் 26) : மேல் நோக்கி செல்லும் தங்கம்.! எப்போ இறங்கும் தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து, ஒரு சவரன் ₹94,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச முதலீடுகள் அதிகரித்ததே விலை உயர்வுக்குக் காரணம் என கூறப்படும் நிலையில், நடுத்தர மக்கள் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.

தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 3 வது நாளாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி எப்போது குறையும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆபரணத்தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 640 ரூபாய் அதிகரித்து 94,400 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 176 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.
திட்டமிட்டு வாங்குவது அவசியம்
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். கார்த்திகை மாதத்திற்கு பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

