Gold Rate Today (December 02): கொஞ்சம் கீழே இறங்கி வந்த தங்கம்! இன்றைய விலை தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ஆர்வம் காட்டுவதால் தங்கம் விலை சரிந்துள்ளதாகவும், இது வரும் வாரத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து இல்லத்தரசிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆபரண தங்கம் விலை சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.12040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 240 ரூபாய் குறைந்து 96,320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ஆர்வத்துடன் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 196 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதானே தாரக மந்திரம்
சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை அதிகரித்துள்ளதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து பங்கு சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தங்கம் என்பது செண்டிமெட்டாக உள்ளதால் விலையை பற்றி கவலைப்படாமல் அதனை பொதுமக்கள் வாங்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தங்கம் விலை குறைஞ்சா வாங்குவோம், ஏறுனா காத்திருப்போம் என்ன இதுதானே தாரக மந்திரம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

