ரூ.70,000க்கும் கீழ் சரிந்த தங்கம்! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது!
தமிழகத்தில் தங்க நகைகள் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. மே 15ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நகைகள் மீதான மோகம் அதிகரிப்பு
தங்கத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தங்கத்தை வாங்கி குவிக்கும் பொதுமக்கள்
அந்த வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் தங்க நகைக்கடைகளில் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதற்கு முக்கிய காரணம் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். மேலும் அவரச தேவை என்றால் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தங்க நகையை அடகு கடைகளில் வைக்கவும் உதவுகிறது.
நேற்றைய தங்கம் விலை
இந்நிலையில் மே மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சரசரெவன குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,805-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 70,440க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
இன்றைய (மே15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,393-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.75,144-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.108.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.