நகை பிரியர்களுக்கு ஷாக்... தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.! ஒரு கிராமுக்கு எவ்வளவு கூடியது தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய விலையை விட 8 கிராமிற்கு 120 ரூபாய் அதிகரித்து 47 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தின் மீது மக்களின் ஆர்வம்
தங்கம் பல நூற்றாண்டுகளாக மிகவும் விலைமதிப்பற்ற மற்றும் விரும்பப்படும் உலோகமாக இருந்து வருகிறது, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் வாங்காமல், முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் மக்கள் பார்க்கின்றனர்.
அதிகரித்த தங்கத்தின் விலை
தங்கத்தின் மீதான மக்களை ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக தங்கத்தின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 5880 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய நிலவரத்தை பொருத்தவரை 15 ரூபாய் அதிகரித்து 5895 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா.?
8 கிராம் தங்கம் நேற்று 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய விலை 120 ரூபாய் அதிகரித்து 47 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 6,431 (1 கிராம்) ஆகவும் உள்ளது.
இதையும் படியுங்கள்