MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குட் நியூஸ் வருது.. மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு.. டிஏ அப்டேட்

குட் நியூஸ் வருது.. மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு.. டிஏ அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 08 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
Image Credit : Getty

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (டிஆர்) உயர்வு பற்றிய அறிவிப்பாகும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை இந்த உயர்வு அறிவிக்கப்படும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களை கொண்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும். ஆனால் 2026 ஜனவரி மாதத்திற்கான டிஏ உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

25
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
Image Credit : Gemini

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்

பொதுவாக ஹோலி திருவிழா காலத்தில் மத்திய அரசு டிஏ உயர்வை அறிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஹோலி கடந்தும் எந்த அறிவிப்பும் வராததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை டிஏ சுமார் 2 சதவீதம் உயரக்கூடும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. தற்போது 58 சதவீதமாக உள்ள டிஏ, இந்த உயர்வு அமலாகினால் 60 சதவீதமாக அதிகரிக்கும்.

Related Articles

Related image1
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!
Related image2
படித்தவர்கள், அதிக சம்பளம் பெறுபவர்களா நீங்கள்? உங்கள் வேலைக்கு AI வைக்கும் குறி - புதிய ரிப்போர்ட்!
35
டிஏ உயர்வு
Image Credit : stockPhoto

டிஏ உயர்வு

டிஏ உயர்வு கணக்கிடப்படுவது தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) என்ற தரவின் அடிப்படையில் தான். கடந்த 12 மாதங்களின் சராசரி மதிப்பைக் கொண்டு டிஏ உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், ஒவ்வொரு முறையும் டிஏ உயர்வு அறிவிக்கப்படுவது அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவியாக இருக்கும். இதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் டிஆர் என்ற பெயரில் இதே அளவு உயர்வு வழங்கப்படும்.

45
அடிப்படை சம்பளம்
Image Credit : stockPhoto

அடிப்படை சம்பளம்

உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், தற்போது 58% டிஏ அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.17,400 அகவிலைப்படி கிடைக்கிறது. இதனால் மொத்த சம்பளம் ரூ.47,400 ஆக இருக்கும். டிஏ 2% உயர்ந்து 60% ஆக மாறினால், அகவிலைப்படி ரூ.18,000 ஆகும். அதாவது மாதம் கூடுதலாக ரூ.600 அதிகரிக்கும்.

55
மத்திய அரசு
Image Credit : Asianet News

மத்திய அரசு

மேலும் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், தற்போது 58% டிஏ அடிப்படையில் ரூ.29,000 அகவிலைப்படி கிடைக்கிறது. மொத்தம் ரூ.79,000 சம்பளம் இருக்கும். டிஏ 2% உயர்ந்து 60% ஆன பிறகு, அகவிலைப்படி ரூ.30,000 ஆக அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் ரூ.80,000 ஆகும். இருப்பினும் இந்த உயர்வு குறித்து மத்திய அரசு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மத்திய அரசு
அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
சம்பள உயர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி ரூ.50,000 மட்டும் எடுக்க முடியும்.. ஏடிஎம் லிமிட் குறைப்பு.. எந்த வங்கி?
Recommended image2
Gold Rate: தங்கம் வாங்க பிளான் இருக்கா? இதோ உங்களுக்கு ஒரு ஜாக்பாட் அப்டேட்! இன்றைய விலை நிலவரம்!
Recommended image3
இந்த வங்கியின் லைசன்ஸ் ரத்து.. இனி பணம் எடுக்க முடியாது.. உங்க வங்கி இருக்கா?
Related Stories
Recommended image1
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!
Recommended image2
படித்தவர்கள், அதிக சம்பளம் பெறுபவர்களா நீங்கள்? உங்கள் வேலைக்கு AI வைக்கும் குறி - புதிய ரிப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved