MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வாகன ஓட்டிகளே உஷார்.. FASTag-ல் பணம் இல்லையென்றால் 2 மடங்கு அபராதம்.. முழு விவரம்!

வாகன ஓட்டிகளே உஷார்.. FASTag-ல் பணம் இல்லையென்றால் 2 மடங்கு அபராதம்.. முழு விவரம்!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் (Cash) வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Rayar r
Published : Apr 01 2026, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சுங்க கட்டணம் உயர்வு
Image Credit : Asianet News

சுங்க கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) புதிய அறிவிப்பின்படி, இன்று (ஏப்ரல் 1) முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கார்கள், பேருந்துகளுக்கு எவ்வளவு?

கார்கள் மற்றும் ஜீப்கள் ஒரு முறை பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பேருந்துகள் மற்றும் லாரிகள் வாகனத்தின் அளவைப் பொறுத்து ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பெரிய கனரக வாகனங்கள் தற்போதைய கட்டணத்திலிருந்து ₹100 முதல் ₹200 வரை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

24
எந்தெந்த சுங்கச்சாவடிகளில் உயர்வு?
Image Credit : stockPhoto

எந்தெந்த சுங்கச்சாவடிகளில் உயர்வு?

தமிழகத்தில் அதிக வாகனங்கள் செல்லும் சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி, மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளான பரனூர், ஸ்ரீபெரும்புதூர், வானகரம், கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி மற்றும் சென்னாசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் முழுமையடையாததால், அங்கு மட்டும் கட்டண உயர்வு தற்போது கிடையாது.

Related Articles

Related image1
FASTag Rules: ஏப்ரல் 2026 முதல் FASTag வருடாந்திர பாஸ் விலை உயர்வு! இனி எவ்வளவு தெரியுமா?
Related image2
FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
34
இனி ரொக்கப் பணம் இல்லை
Image Credit : Google

இனி ரொக்கப் பணம் இல்லை

மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் (Cash) வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இனி தங்களது சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI (QR Code) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். ரொக்கப் பணம் செலுத்தும் பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் விரைவாகச் செல்லவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

44
2 மடங்கு அபராதம்
Image Credit : stockPhoto

2 மடங்கு அபராதம்

உங்கள் FASTag-ல் போதிய பேலன்ஸ் (Balance) இல்லை என்றால், அங்கேயே வழங்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்து UPI (GPay, PhonePe, Paytm) மூலம் பணம் செலுத்தலாம். ஆகவே வாகன ஓட்டிகள் தங்கள் FASTag கணக்கில் போதிய தொகையை முன்கூட்டியே வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது UPI வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியமாகும். உங்கள் வாகனத்தில் FASTag இல்லையென்றால் அல்லது அது செயல்படவில்லை என்றால், நீங்கள் 2 மடங்கு அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
ஃபாஸ்டேக் புதிய விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG: அட்ரஸ் புரூப் தேவையில்லை.. கம்பெனி, காலேஜ் IDபோதும்.. இனி ஈஸியா கேஸ் சிலிண்டர் கிடைக்கும்!
Recommended image2
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பவர்களே உஷார்.. இனி கூடுதல் கட்டணம்.. முழு விபரம் இதோ!
Recommended image3
தினமும் 2GB டேட்டா.. 20GB போனஸ்.. ஆஃபர்களை வாரி வாரி வழங்கும் ஜியோ.!
Related Stories
Recommended image1
FASTag Rules: ஏப்ரல் 2026 முதல் FASTag வருடாந்திர பாஸ் விலை உயர்வு! இனி எவ்வளவு தெரியுமா?
Recommended image2
FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved