MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஸ்விக்கி, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்! மத்திய அரசின் EPFO 3.0 அதிரடி திட்டம்!

ஸ்விக்கி, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்! மத்திய அரசின் EPFO 3.0 அதிரடி திட்டம்!

EPFO 3.0: ஸ்விக்கி, சோமாட்டோ, ஓலா ஊழியர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் EPFO 3.0 மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 18 2026, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்
Image Credit : AI

ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்கள், ஓலா, உபேர் ஓட்டுநர்கள் போன்ற கோடிக்கணக்கான கிக் தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. EPFO 3.0 சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), மாதம் ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், நாட்டில் உள்ள சுமார் 41 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் எந்தவிதமான ஓய்வூதியப் பாதுகாப்புமின்றி உள்ளனர். இந்தப் பெரிய இடைவெளியை நிரப்பும் நோக்கில், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படும் மாடல்களை ஆய்வு செய்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்த திட்டம் செயல்படும் விதம் எப்படி?
Image Credit : Getty

இந்த திட்டம் செயல்படும் விதம் எப்படி?

இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்கு 55 வயது ஆகும் வரை, அவரது கணக்கு ஒரு சாதாரண வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு போலவே செயல்படும். செலுத்தப்படும் தொகை, பாதுகாப்பான அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் வட்டி வரவு வைக்கப்படும். ஒருவர் 60 வயதை எட்டும்போது, அதுவரை சேர்ந்துள்ள மொத்தத் தொகை, 'இலக்கு ஓய்வூதியத் தொகை' (Target Retirement Sum - TRS) என்ற அடிப்படையில் ஓய்வூதியமாக மாற்றப்படும். சந்தையில் நிலவும் வட்டி விகிதங்கள் மற்றும் ஆனுட்டி விகிதங்களைக் கொண்டு இந்த ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

இதையும் படிங்க:Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!

Related Articles

Related image1
Indian Railways: ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!
Related image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
34
இந்த திட்டத்தை தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள்
Image Credit : our own

இந்த திட்டத்தை தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள்

தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) போலல்லாமல், இந்த புதிய திட்டம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியம் பெறுவதற்கு இரண்டு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் வாய்ப்பின்படி, உங்களின் அசல் தொகை அப்படியே பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை மட்டும் நீங்கள் மாத ஓய்வூதியமாகப் பெறலாம்.

உதாரணமாக, உங்கள் கணக்கில் ரூ.1 கோடி இருந்தால், அதற்கு 8% வட்டி கிடைப்பதாகக் கொண்டால், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.66,000 ஓய்வூதியமாக உங்களுக்கு வழங்கப்படும். இரண்டாவது வாய்ப்பின்படி, தேவைப்பட்டால் அசலிலிருந்தும் ஒரு பகுதியை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஆரம்ப ஆண்டுகளில் அதிக ஓய்வூதியம் தேவைப்படுபவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

44
யாரெல்லாம் முக்கியப் பயனாளிகள்?
Image Credit : Asianet News

யாரெல்லாம் முக்கியப் பயனாளிகள்?

இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த நிறுவனங்கள் தங்களது வருவாயில் இருந்து 1% முதல் 2% வரை ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்குப் பங்களிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள 3.5 கோடிக்கும் அதிகமான கட்டடத் தொழிலாளர்களும் இதில் இணைக்கப்படுவார்கள்.

இதற்காக, மாநில நல வாரியங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள ரூ.70,000 கோடி செஸ் நிதியைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, மாதம் ரூ.15,000-க்கு மேல் சம்பளம் வாங்குவதால் தற்போது EPS திட்டத்தில் சேர முடியாத ஊழியர்களும், இந்த புதிய திட்டத்தில் இணைந்து தங்களின் ஓய்வூதிய காலத்தில் சேமிப்பைத் தொடங்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
மத்திய அரசு ஊழியர்கள்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Recommended image2
Bank Holidays: ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை நாட்களுக்கு பேங்க் லீவா.! விடுமுறை பட்டியல் இதோ!
Recommended image3
Tatkal Booking: தட்கல் டிக்கெட் புக் செய்வோருக்கு குட் நியூஸ்.. ஐஆர்சிடிசி அதிரடி
Related Stories
Recommended image1
Indian Railways: ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!
Recommended image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved