- Home
- Business
- Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!
Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!
Indian Railways: இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 3 மணி நேரத்தில் சென்று விட முடியும்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து உயிர்நாடியாக உள்ளது. நமது நாட்டில் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனா, ஜப்பானை போன்று இந்தியாவும் புல்லட் ரயில்களை இயக்க ரெடியாக உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை, அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!
சென்னை டூ ஹைதரபாத் வெறும் 3 மணி நேரம்
தற்போது ரயிலில் 6 முதல் 7 மணி நேரமும், சாலை மார்க்கமாக 8 முதல் 9 மணி நேரமும் ஆகும் மும்பை - அகமதாபாத் பயணத்தை, வெறும் 2 மணி 7 நிமிடங்களில் முடிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதை சாத்தியமாக்க உள்ளது. இத்திட்டத்தின் முழு வழித்தடமும் 2029-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் சென்னை டூ பெங்களூரு, சென்னை டூ ஹைதராபாத் இடையேயும் புல்லட் ரயில் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சென்னையில் இருந்து 630 கிமீ தூரம் கொண்ட ஹைதராபத்துக்கு வெறும் 2.30 அல்லது 3 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
இதையும் படிங்க: Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வந்தாச்சு! எந்த ரூட்டில் இயக்கம்? என்னென்ன சிறப்பம்சம்?
2027-ல் முதல் சேவை தொடக்கம்
இந்தியாவில் புல்லட் ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற அதிவேக ரயில் சேவை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையும். இது நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுத் திட்டமும் 2029-ல் நிறைவடையும் என்றாலும், அதன் முதல் பகுதி இன்னும் சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான 50 கி.மீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதை 2027-ல் திறக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
10 நிமிடத்தில் 50 கிமீ போகலாம்
தற்போது இந்த 50 கி.மீ தூரத்தைக் கடக்க ரயிலில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, இந்த பயண நேரம் வெறும் 9 முதல் 10 நிமிடங்களாகக் குறையும் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். குஜராத் மாநில மக்கள்தான் இந்த அதிவேக பயணத்தை இந்தியாவில் முதன்முதலில் அனுபவிக்கப் போகிறார்கள்.
மணிக்கு 320 கி.மீ வேகம், கடலுக்கு அடியில் சுரங்கம்
இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நேர மேலாண்மைக்குப் புகழ்பெற்ற ஜப்பானின் 'ஷிங்கன்சென்' தொழில்நுட்பம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) இத்திட்டத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.
மொத்தம் 508 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரம்மாண்டம் நிகழவிருக்கிறது. மும்பை அருகே சுமார் 7 கி.மீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக புல்லட் ரயில் பயணிக்க உள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் சிக்கல்களைத் தவிர்க்க, பாதையின் பெரும்பகுதி உயரமான தூண்கள் மீது அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

