MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!

EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!

EPFO Update: ஜூலை 15 முதல் EPFO விதிகளில் 10 முக்கிய மாற்றங்கள் வரப்போகின்றன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வருங்கால வைப்பு நிதி தொடர்பான பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 14 2026, 06:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
EPFO Update ஸ்மார்ட் டிஜிட்டல் இன்டர்ஃபேஸ்
Image Credit : Asianet News

EPFO Update - ஸ்மார்ட் டிஜிட்டல் இன்டர்ஃபேஸ்

2025-26 நிதியாண்டுக்கான ஆண்டு வட்டி, ஜூலை 15, 2026-க்குள் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த புதிய தளம் மூலம் சுமார் 1.44 லட்சம் கோடி ரூபாய் வட்டித்தொகை செயலாக்கப்பட்டு, சரிபார்ப்புக்குப் பிறகு சுமார் 34 கோடி EPF கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். 

EPFO சந்தாதாரர்கள் போர்ட்டலில் லாக்-இன் செய்து, ஒரு ஸ்மார்ட் டிஜிட்டல் இன்டர்ஃபேஸை பயன்படுத்தலாம். இதன் மூலம், அவர்கள் தங்களது உறுப்பினர் விவரங்கள், பிஎஃப் பேலன்ஸ், க்ளெய்ம் ஸ்டேட்டஸ், மற்றும் ஓய்வூதிய விவரங்களைப் பார்க்க முடியும். இது பிஎஃப் கணக்கு தொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கேஒய்சி (KYC)
Image Credit : X

கேஒய்சி (KYC)

பல்வேறு பிரிவுகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது, சந்தாதாரர்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். முழுமையாக KYC முடிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான அட்வான்ஸ் க்ளெய்ம்கள் இனி ஆட்டோ-செட்டில்மென்ட் முறையில் செயல்படுத்தப்படும். இதற்கான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறை முழுவதும் மத்திய பேமெண்ட் சிஸ்டம் மூலம் கையாளப்படும். இதனால், பணம் எடுக்கும் அதே நாளில் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் வந்து சேரும்.

Related Articles

Related image1
EPFO : PF பணம் எடுப்பவரா நீங்க? புதியவிதியைத் தெரியாமல் அப்ளை பண்ணாதீங்க!
Related image2
EPFO Interest Rate: PF கணக்குதாரர்களுக்கு குட் நியூஸ்..! ஜூலை 15 முதல் 8.25% வட்டி வரவு..!
36
8.25% வட்டி வழங்கப்படும்
Image Credit : X

8.25% வட்டி வழங்கப்படும்

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி வந்துவிட்டது. 2024-25 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு 8.25% வட்டி வழங்கப்படும். இந்த செயல்முறை ஜூலை 15 முதல் தொடங்கலாம். ஊழியர்களின் ஓய்வூதிய கால நிதிப் பாதுகாப்பிற்காக EPFO ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்குகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த EPFO மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில், 2024-25 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, இப்போது அந்தப் பணத்தை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்க உள்ளது. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.

46
UPI மூலமாகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
Image Credit : Asianet News

UPI மூலமாகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

பிஎஃப் பணத்தை எடுப்பது பற்றி இனி கவலையே வேண்டாம். இனிமேல் UPI மூலமாகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். ஏடிஎம் மூலமாகவும் பணம் எடுக்க முடியும். இந்த வசதிகள் அனைத்தும் EPFO 3.0 திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டுதலின்படி, DigiLocker-லும் உங்கள் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த செயல்முறையில் OTP சரிபார்ப்பும் அடங்கும்.
56
UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்
Image Credit : Google

UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்

உங்கள் UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அடுத்து, உங்கள் வங்கி கணக்கு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், IFSC குறியீடு போன்றவை சரியாக உள்ளதா எனப் பாருங்கள். மேலும், ஆதார், பான் கார்டு மற்றும் EPFO பதிவுகளில் உங்கள் பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
66
பணம் எடுக்கும் முறை
Image Credit : Asianet News

பணம் எடுக்கும் முறை

பணம் எடுக்கும் முறை மூன்று எளிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அத்தியாவசியத் தேவைகள், வீட்டுவசதித் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழல்கள். ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வருபவர்கள், இப்போது எந்தவொரு பிஎஃப் அலுவலகத்திலும் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வணிகம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
TD Scheme: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்துக்கும் மேல் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் TD ஸ்கீம்
Recommended image2
செலவுகள் அதிகமா? மத்திய அரசின் இந்த 5 திட்டங்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவலாம்!
Recommended image3
USA Salaries: அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Related Stories
Recommended image1
EPFO : PF பணம் எடுப்பவரா நீங்க? புதியவிதியைத் தெரியாமல் அப்ளை பண்ணாதீங்க!
Recommended image2
EPFO Interest Rate: PF கணக்குதாரர்களுக்கு குட் நியூஸ்..! ஜூலை 15 முதல் 8.25% வட்டி வரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved