MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கார்ல பெங்களூரு போறீங்களா.! இனி செலவு இரண்டு மடங்காகும்.! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

கார்ல பெங்களூரு போறீங்களா.! இனி செலவு இரண்டு மடங்காகும்.! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால், சென்னை-பெங்களூரு பயணம் கூடுதல் செலவாகும் என்பதோடு, இந்த உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 01 2026, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திட்டமிட்டால் செலவு குறையும்
Image Credit : Getty

திட்டமிட்டால் செலவு குறையும்

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகருக்கும் தமிழகத்திற்கும் இடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் இந்தச் சாலையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய சூழலில், ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்பவர்களுக்கு இந்தப் பயணம் இனி கூடுதல் சுமையைத் தரப்போகிறது.

25
நாடு தழுவிய கட்டண உயர்வு - பின்னணி
Image Credit : Getty

நாடு தழுவிய கட்டண உயர்வு - பின்னணி

தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுதோறும் பராமரிப்பு மற்றும் பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் 5% முதல் 10% வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சுமார் 25-க்கும் மேற்பட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்த உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இது வாகனங்களின் வகையைப் பொறுத்து 5 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
FASTag Rules: ஏப்ரல் 2026 முதல் FASTag வருடாந்திர பாஸ் விலை உயர்வு! இனி எவ்வளவு தெரியுமா?
Related image2
Business Idea : வெயில் காலம் வந்தாச்சு.! இந்த பிசினஸ் ஆரம்பியுங்க.! மாதம் லாபம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
35
பெங்களூரு பயணிகளுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி
Image Credit : Getty

பெங்களூரு பயணிகளுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி

பெங்களூரைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளான ஹோஸ்கோட்–KGF விரைவுச்சாலை, தபாஸ்பேட் - ஹோஸ்கோட் நகர சுற்றுச்சாலை மற்றும் பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலை போன்ற வழித்தடங்களில் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சொந்தக் காரில் பெங்களூரு செல்பவர்கள், இதுவரை செலுத்திய தொகையை விட இனி கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும். இது ஒருபுறமிருக்க, சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வேளையில், இந்தச் சுங்கக் கட்டண உயர்வு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல அமைந்துள்ளது.

45
சாமான்ய மக்கள் மீதான தாக்கம்
Image Credit : Getty

சாமான்ய மக்கள் மீதான தாக்கம்

இந்தக் கட்டண உயர்வு என்பது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பாதிக்கக்கூடியது. லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால், போக்குவரத்துச் செலவு உயரும். இதன் நேரடி விளைவாக:

  • காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயரும்.
  • சரக்கு போக்குவரத்து வாடகை அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் அடையும்.
  • ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது
55
கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.!
Image Credit : Getty

கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.!

உங்கள் பயணத் திட்டங்களை வகுக்கும்போது, இனி இந்தக் கூடுதல் கட்டணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். சுங்கக் கட்டண உயர்வு என்பது சாலை மேம்பாட்டிற்காக என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், பணவீக்கத்தினால் தவிக்கும் சாமானிய மக்களுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாகவே மாறியிருக்கிறது. இனி பெங்களூரு பயணம் என்பது வெறும் தூரத்தைக் கடப்பது மட்டுமல்ல, உங்கள் பர்ஸையும் பதம் பார்க்கும் விஷயமாகப் போகிறது!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை முதல் கேரளா வரை பயணம் இப்போது ஈஸி.. ஸ்பெஷல் டிரெயின் ரெடி.!
Recommended image2
சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு..! முதல் நாளிலேயே ஷாக் கொடுக்கும் சிலிண்டர் விலை.. வணிகர்கள் அதிர்ச்சி
Recommended image3
ATM-ல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்.. HDFC, PNB வங்கிகளின் புதிய விதிகள் இதோ!
Related Stories
Recommended image1
FASTag Rules: ஏப்ரல் 2026 முதல் FASTag வருடாந்திர பாஸ் விலை உயர்வு! இனி எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Business Idea : வெயில் காலம் வந்தாச்சு.! இந்த பிசினஸ் ஆரம்பியுங்க.! மாதம் லாபம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved