- Home
- Business
- Gold: தங்கம் வாங்காதீங்க.! அதை விட கூடுதல் லாபத்தை பெற வழி இருக்கு.! முதலீட்டு ரகசியத்தை உடைக்கும் வாரன் பஃபெட்.!
Gold: தங்கம் வாங்காதீங்க.! அதை விட கூடுதல் லாபத்தை பெற வழி இருக்கு.! முதலீட்டு ரகசியத்தை உடைக்கும் வாரன் பஃபெட்.!
பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட், தங்கம் ஒரு உற்பத்தி இல்லாத சொத்து என்கிறார். கடந்த 15 ஆண்டுகளில், தங்கத்தை விட S&P 500 குறியீடு அதிக வருமானம் தந்துள்ளதால், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதே சிறந்தது என அவர் கூறுகிறார்.

முதலீட்டு ரகசியம் கூறும் வாரன் பஃபெட்
தங்கம் என்பது உலகளாவிய அளவில் மிகவும் மதிப்புமிக்க முதலீட்டு பொருள் என கருதப்படுகிறது. திருமண நகைகள் முதல் வங்கிக் காப்பீடு வரை தங்கத்தின் மதிப்பு ஒவ்வொரு காலத்திலும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பிரபலமான முதலீட்டாளர் மற்றும் உலகின் செல்வந்தர்களில் ஒருவரான வாரன் பஃபெட் கூறும் கருத்து இதற்கு மாறாக இருக்கிறது.
இதுதான் வாரன் பஃபெட் கணக்கு
அவரின் கூற்றுப்படி, தங்கம் வெளியில் உலோகம் என்றே தோன்றலாம், ஆனால் அதனால் உற்பத்தி அல்லது வருவாய் கிடைப்பதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் தங்கத்தின் வருமானம் சுமார் 187% மட்டுமே உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், S&P 500 குறியீட்டின் வருமானம் 465% வரை வளர்ந்துள்ளது, அதாவது வருடாந்திர 18.20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது என வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
கொட்டி கொடுக்கும் பங்குச்சந்தை
அதனால் தங்கத்தை சேமித்து வைக்கும் பொருட்டு முதலீடு செய்வதற்குப் பதிலாக, பங்குச் சந்தையில் சரியான அறிவும் பொறுமையும் கொண்டு முதலீடு செய்வதே நல்ல பலனை அளிக்கும் என்று அவர் கூறுகிறார். வாரன் பஃபெட்டின் கருத்துப்படி, தங்கம் பொருளாதாரத்தில் செயலில் ஈடுபடாது. ஆனால் பங்குகள், நிறுவன வளர்ச்சியோடு இணைந்து உற்பத்தி, லாபம், மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் கொண்டவை. இதனால், தங்கம் சேமிக்கின்ற பழக்கத்தை குறைத்து, நவீன கால முதலீட்டு வழிகளான பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்றவற்றில் ஈடுபடுவது எதிர்கால நிதி வளர்ச்சிக்கான சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.