UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பிட்டீங்களா? பணத்தை திரும்பப் பெற இதை செய்யுங்க!
UPI பரிவர்த்தனையின் போது தவறுதலாக வேறொருவருக்கு பணம் அனுப்பிவிட்டால், என்ன செய்ய வேண்டும்? 48 மணி நேரத்திற்குள் பணம் திரும்பப் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
UPI Payment
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நேரடி பண பரிவர்த்தனை முறையே குறைந்து விட்டது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய மால்கள் வரை யுபிஐ முறையிலே பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். அதே போல் மற்றவர்களுக்கு பணம் செலுத்தும் போது யுபிஐ முறையில் தான் பணம் செலுத்துகிறோம். இந்த முறை பணப் பரிமாற்றத்தை மிகவும் எளிதாக மாற்றி உள்ளது.
UPI Payment
எனினும் மொபைலில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யும் போது, தவறுதலாக மொபைல் எண்ணை பதிவிட்டால், பணம் வேறொருவரின் கணக்கிற்குச் செல்லும். இப்படி தவறுதலாக வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பி விட்டால் என்ன செய்வது? UPI அல்லது பிற பேமெண்ட் ஆப்ஸிலிருந்து பணம் அனுப்பும் போது, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை அனுப்பிவிடால், அதனை எளிதில் திரும்ப பெற முடியும்.
UPI Payment
இதற்கு, நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்கள் போனில் இருந்து அழைப்பு செய்தால் போதும். உங்கள் பணத்தை வெறும் 48 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்?
கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பேமெண்ட் வேகமாக அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், தவறான பரிவர்த்தனைகள் குறித்த புகார்களும் தொடர்ந்து வருகின்றன. பயனர்களின் இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
UPI Payment
எங்கே, எப்படி புகார் செய்வது?
UPI ஆப் மற்றும் நெட் பேங்கிங் மூலம் தவறான கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால், முதலில் 18001201740 என்ற இலவச எண்ணில் புகார் செய்யுங்கள்.
இதற்குப் பிறகு, பணம் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கிற்குச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து அதைப் பற்றிய தகவலைக் கொடுக்கவும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மற்றொரு கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால், புகாருக்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்ப அனுப்புவது வங்கியின் பொறுப்பாகும்.
இது தவிர, வங்கியின் சேவை வாடிக்கையாளர் பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் புகாரைப் பதிவு செய்யலாம்.
வங்கியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால் அல்லது வங்கி உதவி செய்ய மறுத்தால், அது குறித்து bankingombudsman.rbi.org.in இல் புகார் செய்யுங்கள்.
UPI Payment
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தவறான பரிவர்த்தனைக்குப் பிறகு தொலைபேசியில் பெறப்பட்ட செய்தியை நீக்க வேண்டாம். ஏனெனில், இந்த எஸ்எம்எஸ், புகாரின் போது தேவைப்படும் பிபிபிஎல் எண்ணைக் கொண்டுள்ளது. நீங்கள் தவறான பரிவர்த்தனை செய்தால், 3 நாட்களுக்குள் அதைப் பற்றி புகார் செய்யுங்கள்.