அமெரிக்க பங்குச் சந்தையை ஒரே நாளில் ஆட்டம் காண வைத்த 29 வயது சீனப் பெண்; யார் அவர்?
டீப்சீக் செயலி உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், சீனாவை சேர்ந்த 29 வயது பெண் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அமெரிக்க பங்குச் சந்தையை ஒரே நாளில் ஆட்டம் காண வைத்த 29 வயது சீனப் பெண்; யார் அவர்?
உலகளவில் சாட்பாட் (ChatGPT), Gemini மற்றும் Claudeபோன்ற Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த செயலிகளுக்கு போட்டியாக டீப்சீக் (DeepSeek) என்ற AI செயலி களமிறங்கி உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட டீப்சீக், அமெரிக்க ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் சாட்பாட்டை விட டீப்சீக் செயலியை அதிகமானோர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி டீப்சீக் வருகையால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. டீப்சீக் காரணமாக அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தன.
டீப்சீக் செயலி
சீனாவின் ஹாங்சோவை தளமாகக் கொண்ட டீப்சீக் 40 வயதான லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023ம் ஆண்டு நிறுவப்பட்டது. டீப்சீக் செயலி உருவாவதற்கு பின்னால் ஒரு குழுவே இருந்துள்ளது. இதில் மிக முக்கியமானவர் 29 வயதான பெண் லுவோ ஃபுலி. ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்த நிபுணரான லுவோ ஃபுலி, டீப்சீக் செயலியில் இயல்பான மொழி செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். டீப்சீக் செயலியில் இயல்பான மொழி செயலாக்கம் பாராட்டை பெற்று வருவதற்கு முக்கிய காரணம் இவர் தான்.
லுவோ ஃபுலி, பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பு படித்தார். தொடக்கத்தில் இந்த படிப்பில் சிரம்மப்பட்ட அவர் இறுதியில் சிறந்து விளங்கினார். 2019ம் ஆண்டு நடந்த ACL மாநாட்டில் எட்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு பீக்கிங் பல்கலையில் கணக்கீட்டு மொழி இன்ஸ்டிடியூட்டில் இடம்பிடித்தார். லுவோ ஃபுலியின் இந்த சாதனை தொழில்நுட்ப ஜாம்பவான்களான அலிபாபா மற்றும் சியோமி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது.
G Pay, Phone Peவில் பிப். 1 முதல் பணம் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு: UPI வெளியிட்ட முக்கிய அப்டேட்
லுவோ ஃபுலி
இதனால் அவர் அலிபாபாவின் DAMO அகாடமியில் ஒரு ஆராய்ச்சியாளராக முன் பயிற்சி மாதிரி VECO இன் வளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் அலிபாபாவின் மூல ஆலிஸ் மைண்ட் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இதன்பிறகு லுவோ ஃபுலி 2022ம் ஆண்டு டீப்சீக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். டீப்சீக்-V2 ஐ உருவாக்குவதில் இயற்கை மொழி செயலாக்கத்தில் அவரது நிபுணத்துவம் முக்கிய பங்கு வகித்தது.
டீப்சீக்-சாட்பாட்
டீப்சீக்கில் உள்ள இயற்கை மொழி செயலாக்கம் தான் அதனை சாட்பாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தனது தனித்துவ திறமை காரணமாக லுவோ ஃபுலி ஆண்டுக்கு 10 மில்லியன் யுவான் சம்பலம பெறுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
சொளையா 8.05% வட்டி தரும் வங்கி.. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.