IT Hub: இந்தியாவின் 'ஐடி ஹப்' ஆக மாறும் கோவை! டேட்டாவை பார்த்தா அசந்து போவீங்க!
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்கி வரும் கோவை இந்தியாவின் 'ஐடி ஹப்' ஆக மாறி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

IT Hub: இந்தியாவின் 'ஐடி ஹப்' ஆக மாறும் கோவை! டேட்டாவை பார்த்தா அசந்து போவீங்க!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான கோவை, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோவையிலும், கோவையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த மாவட்டமாக கோவை உள்ளது.
இப்போது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக மாநிலத்தின் தலைநகர் சென்னை உள்ளது. இதேபோல் கோவையையும் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக மாற்ற தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. கோவையில் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும்.
கோவை டைடல் பார்க்
கோவை விலாங்குறிச்சியில் 2010ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் 56 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. இதன்பிறகு அங்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்தன. காக்னிசண்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, சின்டெல், HCL டெக்னாலஜிஸ் என அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கோவையில் அமைந்துள்ளன.
கோவையில் இந்தியாலேண்ட் டெக் பார்க் 1.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐடி/ஐடிஇஎஸ் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஐடி துறை, வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஐஓடி, ஏஐ மற்றும் பிளாக்செயின் போன்ற புதிய யுக தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்த வங்கியில் இருந்து 6 மாதங்களுக்கு பணம் எடுக்க முடியாது! ரிசர்வ் வங்கி உத்தரவு!
கோவை தமிழகத்தின் ஐடி மையம்
கோவையை தமிழகத்தின் ஐடி மையமாக மாற்ற திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு 2024- 2025ம் நிதியாண்டில் ரூ 1100 கோடி மதிப்பில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இப்போது இந்தியாவின் ஐடி தலைநகராக பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் இருக்கும் நிலையில், கோவையும் இந்த இடத்தில் வருவதற்கு ஏற்ற வகையில் புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன.
இந்தியாவில் 50 ஆயிரம் முதல் 99,999 வரை மக்கள்தொகை கொண்ட 2ம் நிலை நகரங்களில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் முதல் 20 நகரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத்தின் அகமாதாபத் முதல் இடத்திலும், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா 2ம் இடத்தில் இருக்கும் நிலையில், கோவை 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சேலம் 14வது இடத்திலும், மதுரை 17வது இடத்திலும் உள்ளன. நெல்லை 20வது இடம் பிடித்துள்ளது.
கோவை-பெங்களூரு
இந்திய அளவில் கோவை 3வது இடம் பிடித்துள்ளதால் கோவையின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. ஏராளமான ஐடி நிறுவனங்கள் பெங்களூருக்கு சென்றதற்கு முக்கிய காரணம் அங்குள்ள உள்கட்டமைப்பும், மிதவெப்பமான காலநிலையும் தான். பெங்களூருவை ஒப்பிடும்போது கோவையிலும் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை போன்று அதிக வெப்பநிலை இருக்காது.
சாலை போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளிலும் கோவை சிறந்த நிலையில் உள்ளது. இருப்பினும், பெங்களூரு போன்ற பெரிய தொழில்நுட்ப மையங்களுடன் போட்டியிட அதிவேக இணைய உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற வசதிகளில் மேலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் போன்ற சவால்கள் கோவைக்கு உள்ளன. கோவை மட்டும் தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாறினால் இளைஞர்கள் ஐடி வேலைக்கு பெங்களூரு, சென்னைக்கு ஓட வேண்டியதில்லை.
PM Kisan: 10 கோடி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! அக்கவுண்டில் ரூ.2,000 ஏறும்! மத்திய அரசின் பரிசு!