'குடி'மகன்களுக்கு குளுகுளு நியூஸ்! பீர் விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா?
பிரிட்டிஷ் பீர் பிராண்டுகளுக்கான வரி 75% குறைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பிராண்டுகளின் பீர் விலை குறைந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
British brands beer price dropped in India
இந்தியா முழுவதும் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. தலைநகர் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு என அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களை தவிர்க்க மற்ற இடங்களில் வெயிலின் கொடுமை இருக்கிறது.
இந்தியாவில் ஒருபக்கம் வெயில் வாட்டும் நிலையில், மறுபக்கம் மதுபானக்கடைகளில் பீர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டு டாஸ்மாக் கடைகளிலும் பீர்களின் விற்பனை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரிட்டீஸ் பிராண்ட்களின் பீர் விலை குறைப்பு
இந்நிலையில், இந்த கோடையில் மது பிரியர்களுக்கு ஒரு குளிர்ச்சியான செய்தியாக பிரிட்டிஷ் பீர் பிராண்டுகளின் விலை இந்தியாவில் குறைந்துள்ளது. பிரிட்டிஷ் பிராண்ட் பீர்கள் இப்போது வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட குறைந்த விலையில் கிடைக்கும். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பிராண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 150% வரி விதிக்கப்பட்டது.
இப்போது இந்த வரி 75% குறைக்கப்பட்டுள்ளது. எனவே பிரிட்டிஷ் பிராண்ட்களின் பீர் இந்தியாவில் முன்பை விட குறைந்த விலையில் வாங்க முடியும். பிரிட்டிஷ் ஸ்காட்ச் மீதான வரி முன்பை விட குறைவாக உள்ளது என்று கூறலாம்.
தமிழ்நாட்டில் பிரிட்டீஸ் பீர் விலை எவ்வளவு?
இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரிட்டீஸ் பிராண்ட் பீர் விலை மாறுபாடுகிறது. தமிழ்நாட்டில் பிரிட்டீஸ் எம்பயர் பீர் விலை ரூ.170 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரி குறைப்பால் எவ்வளவு விலை குறையும் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்திய அரசு திறந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்து மதுவுக்கு எந்த வரி விலக்கையும் வழங்கவில்லை. ஆனால் யுகே பீர் மீது சில வரி விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விலக்கு காரணமாக, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பீரின் விலையும் குறைந்துள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மதுவுக்கு வரி விலக்கு செய்த இந்தியா
மே 6 அன்று இரு நாடுகளுக்கும் இடையே திறந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் மதுவுடன் பல பொருட்கள் விலக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பால் பொருட்கள், ஆப்பிள்கள், சீஸ், ஓட்ஸ், விலங்கு மற்றும் தாவர எண்ணெய்கள் போன்ற பொருட்களுக்கு இந்தியா எந்த வரி விலக்கையும் வழங்கவில்லை.
விவசாய பொருட்களுக்கு வரி விலக்கு இல்லை
இந்தியா குறிப்பிட்ட பீர் பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளித்துள்ளது. பல விவசாய பொருட்கள் வரி விலக்கிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற மதுவின் மீதான வரியைக் குறைக்குமாறு இந்தியா மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், இந்தியா மதுவுக்கு வரி விலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒயின் மீதான வரியும் குறைக்கப்படவில்லை.