Asianet News TamilAsianet News Tamil

Benefits of Beer : பீர் குடிப்பது மோசமானதல்ல.. அதை நிரூபிக்கும் டாப் 5 காரணங்கள் இதோ - முழு விவரம்!

Benefits of Beer : பீர் குடிப்பது மோசமானதல்ல என்பதற்கான 10 காரணங்களை இப்பொது பார்க்கலாம். அதே சமயம் இது பீர் உட்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கமல்ல. மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இதை தவிர்க்கவேண்டும்.

Beer is not bad for health here are top 5 reasons to prove it ans
Author
First Published Apr 5, 2024, 8:19 PM IST

1. பீர் குடிப்பவர்கள் அதிக நாள் வாழ்கின்றனர் 

அதிக அளவில் மது உட்கொள்வது என்பது எந்த ஒரு நிலையிலும் ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதே சமயம் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தரும் செய்தி என்னவென்றால், தனது நிலை அறிந்து குறைந்த அளவில் மது உட்கொள்பவர்கள், பெரிய அளவில் உடற்பயிற்சி இல்லாத, அதேசமயம் குடிப்பழக்கம் இல்லாதவர்களை விட அதிக நாள் வாழ்வதாக கூறுகிறது. அப்படி மிதமான ஒரு குடிப்பழக்கத்தை கொண்டவர்களுக்கு பீர் என்பது ஒரு நல்ல பானமாக திகழ்கிறது.

2. பீர் முற்றிலும் இயற்கையானது

பீரில் பல Preservatives மற்றும் Additives நிறைந்துள்ளன என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், பீர் ஆரஞ்சு ஜூஸ் அல்லது பால் போன்று இயற்கையானது. பீருக்கு ப்ரிசர்வேட்டிவ்கள் தேவையில்லை, ஏனெனில் அதில் ஆல்கஹால் மற்றும் ஹாப்ஸ் உள்ளன, இவை இரண்டும் இயற்கையானவை. இன்னும் சொல்லப்போனால் ரொட்டியை போல தன பீர் "பதப்படுத்தப்படுகிறது": இது சமைக்கப்பட்டு புளிக்கவைக்கப்பட்டு, பின்னர் வடிகட்டி மற்றும் பேக்கேஜ் செய்யப்படுகிறது. 

Summer Drinks : கோடையில் குளு குளுனு இருக்க இனி கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீங்க.. "இத' மட்டும் குடிச்சா போதும்!

3. பீரில் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவு - கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை

முற்றிலும் இயற்கையான பானம் என்று வரும்போது, பீர் குறைந்த அளவிலான கலோரி கொண்ட ஒரு பானமாக திகழ்கின்றது. பன்னிரண்டு அவுன்ஸ் கின்னஸில், 12 அவுன்ஸ் கொழுப்பு நீக்கிய பாலில் உள்ள அதே எண்ணிக்கையிலான கலோரிகள் உள்ளன: இது ஆரஞ்சு பழ சாற்றை விட (150 கலோரிகள்) குறைவானது, உங்களின் ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரமாக பீர் இருந்தால், உங்கள் பரிந்துரைக்கப்பட்ட தினசரி கலோரி அளவை (2,000 முதல் 2,500 வரை) அடைய, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். ஆகவே பீர் என்பது கலோரி குறைவான ஒரு பானம்.

4. பீர் உங்கள் கொலஸ்ட்ராலை மேம்படுத்துகிறது 

பீரில் கொலஸ்ட்ரால் இல்லை என்பது மட்டுமல்ல, அது உண்மையில் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை மேம்படுத்தும். உண்மையில், பீரை தொடர்ந்து அல்லது மிதமான அளவில் குடிப்பது உங்கள் HDL/LDL கொலஸ்ட்ரால் விகிதத்தை சரியான வழியில் எடுத்துச்செல்லும்.

5. பீரில் ஏராளமான பி வைட்டமின்கள் உள்ளன

பீரில் அதிக அளவு பி வைட்டமின்கள் உள்ளன, குறிப்பாக ஃபோலிக் அமிலம் உள்ளது, இது மாரடைப்பைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது. பீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது உங்கள் உடலை சீராக வைத்திருப்பதற்கு நல்லது. இது உங்கள் உடலை, கொழுப்பு போன்ற ஆரோக்கியமற்ற விஷயங்களை உறிஞ்சும் வாய்ப்பைக் குறைக்கிறது.

Diabetes : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா..? மீறினால் என்ன நடக்கும்..??

Follow Us:
Download App:
  • android
  • ios