போடு!.. பாலிசிதாரர்களுக்கு நல்ல செய்தி.. காப்பீட்டு பிரீமியத்தில் 18% ஜிஎஸ்டி நீக்கம்
ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்தில் விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு பிரீமியம் தொகையைக் குறைத்து, காப்பீட்டை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காப்பீட்டு ஜிஎஸ்டி நீக்கம்
காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்ட முடிவு, பாலிசிதாரர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அரசு தெரிவித்துள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் உள்ளிட்ட சுகாதார காப்பீடுகளின் பிரீமியம் தொகையில் இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரத்தை அவர் வெளியிட்டார்.
சுகாதார காப்பீடு ஜிஎஸ்டி
வரி நீக்கப்பட்டதால் காப்பீட்டு பிரீமியம் தொகை குறைந்துள்ளது. இதன் மூலம் மேலும் பலர் காப்பீடு எடுக்க முன்வருவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்பாராத நிதி சிக்கல்களிலிருந்து குடும்பங்களை பாதுகாக்க இந்த முடிவு உதவும் என்றும், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இதை அரசு பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
18 சதவீத வரி விலக்கு
கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த 18 சதவீத வரியை நீக்க முடிவு செய்தது. ஆனால், வரி விலக்கு அமலுக்கு வந்த பிறகு காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது செலவுகளை சரிசெய்ய அடிப்படை பிரீமியத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. கமிஷன், அலுவலக வாடகை போன்ற செலவுகளை வரியில் கணக்கிட முடியாததால், 1 முதல் 4 சதவீதம் வரை உயர்வு தேதி என சில டேட்டா நிறுவனங்கள் கணித்திருந்தன.
ஆயுள் காப்பீடு அப்டேட்
ஆனால் இந்தக் கவலை தேவையற்றது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஜிஎஸ்டி விலக்கின் முழுப் பயனும் நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. இதுவரை பிரீமியம் உயர்வு எதுவும் நடைபெறவில்லை என்றும், வரி குறைப்பின் பலன் முழுமையாக பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரீமியம் குறைப்பு
இதற்கிடையில், மருத்துவம் மற்றும் கல்விப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமையுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் பிரெய்லி புத்தகங்களுக்கு தற்போது ஜிஎஸ்டி விலக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

