உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? செக் பண்ணுங்க
ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? உங்கள் ஆதார் மோசடியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Aadhaar Card History
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. அனைவரையும் கவலையடையச் செய்யும் ஒரு விஷயம், அவர்களின் அடையாளம் அல்லது முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதுதான்.
ஆதார் அட்டை
ஆதார் அட்டை என்பது இந்தியக் குடிமக்களின் அடையாளச் சான்று தொடர்பான முக்கிய ஆவணம். உங்கள் ஆதார் அட்டை எங்காவது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்க்கலாம். உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்துதல்
உங்கள் ஆதார் அட்டையை யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? UIDAI அதன் பயனர்களுக்கு ஆதார் அட்டை பயன்பாட்டு வரலாற்றைச் சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. இவ்வாறு சரிபார்க்கவும். முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் (https://resident.uidai.gov.in) செல்லவும்.
ஆதார் குறித்த புகார்கள்
ஆச்சரியப்படும் விதமாக, இந்தச் செயல்முறையின் மூலம், ஆதார் அட்டை பயன்பாட்டின் 6 மாத வரலாற்றைச் சரிபார்க்கலாம். ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது? 1947 என்ற இலவச எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.