பிப்ரவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?.. முழு லிஸ்ட் இதோ!
பிப்ரவரியில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும்? எத்தனை நாட்கள் திறந்திருக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வங்கிகள் விடுமுறை
ஜனவரி மாதம் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினம் என வங்கிகளுக்கு தொடர் விடுமுறை நாட்கள் இருந்தன. ஜனவரி மாதத்தில் இந்தியாவில் வங்கிகள் சுமார் 10-12 நாட்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாட்கள் அதிகம் இல்லாததால் வங்கிகள் பெரும்பாலான நாட்கள் திறந்திருக்கும்.
பிப்ரவரியில் வங்கிகளுக்கு விடுமுறை
சில மாநிலங்களுக்கான குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்படும் விடுமுறைகளைத் தவிர, பிப்ரவரி மாதத்தில் பெரும்பாலான நாட்களில் திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ காலண்டரின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள வங்கிகள் ஆறு முதல் ஏழு நாட்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கும். அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2026 வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட்
பிப்ரவரி 14 - இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்
பிப்ரவரி 18 - லோசார் (சிக்கிம்)
பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மகாராஷ்டிரா)
பிப்ரவரி 20 - மாநில தினம்/மாநில நிறுவன நாள் (மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம்)
பிப்ரவரி 28 - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்
பிப்ரவரி 1, 8, 15, 22 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை
டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல் செயல்படும்
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலண்டர் ஆண்டின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது. நாட்டில் உள்ள வங்கிகள் தேசிய விடுமுறைகள் மற்றும் பிராந்திய பண்டிகைகள் தவிர, மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும்.
வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல் 24 மணிநேரமும் செயல்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

