- Home
- Career
- SBI: எஸ்பிஐ வங்கியில் 2,273 பணியிடங்கள்.. ரூ.52,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!
SBI: எஸ்பிஐ வங்கியில் 2,273 பணியிடங்கள்.. ரூ.52,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!
SBI JOB: எஸ்பிஐ வங்கி 2,273 சிபிஓ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 2,273 வட்டார அளவிலான அதிகாரி (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 31.12.2025 நிலவரப்படி ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் குறைந்தது 2 ஆண்டுகள் அதிகாரி நிலையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
பொதுத்துறை வங்கிகள் அல்லாத பிற வணிக வங்கிகளில் பணிபுரிந்தவர்கள், தங்களின் ஆண்டு வருமானம் ரூ. 9.50 லட்சத்திற்கு மேல் இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு 29/01/2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18/02/2026 ஆகும். விண்ணப்பிக்கும் வட்டாரத்தின் உள்ளூர் மொழியில் சரளமாக பேச, படிக்க மற்றும் எழுத கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம், வயது தளர்வு உண்டா?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகளும், அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகளும் ஆகும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு கிடைக்கும். பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 750 ரூபாய் செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்தலாம். அதாவது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால் ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டால் அதனை திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறையை பொறுத்தவரை அப்ஜெக்டிவ் வகை (120 மதிப்பெண்கள்) மற்றும் கட்டுரை/கடிதம் எழுதும் தேர்வு (50 மதிப்பெண்கள்) கொண்ட ஆன்லைன் தேர்வு இருக்கும். தவறாக அளிக்கும் பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் தேர்வை தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் தகுதிகள் சரிபார்க்கப்படும். இதன்பிறகு இன்டெர்வியூ நடைபெறும். இந்த இன்டெர்வியூவுக்கு 50 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் SBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது உங்களது சமீபத்திய புகைப்படம், கையொப்பம் மற்றும் ID Proof, கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் மற்றும் சலுகைகள்
நீங்கள் எந்த வட்டாரத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட கிளைகளில் மட்டுமே பணி அமர்த்தப்படுவீர்கள். பாரத ஸ்டேட் வங்கியில் வட்டார அளவிலான அதிகாரி பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.48,480 ஆகும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு 2 கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்.
இதனால் தொடக்க அடிப்படை ஊதியம் சுமார் ரூ.52,480 ஆக உயரும். மேலும் அனைத்து படிகளையும் சேர்த்து மொத்த சம்பளம் ரூ.90,000 வரை கிடைக்கும். அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவ காப்பீடு, பெட்ரோல் மற்றும் இதர படிகள் ஆகிய சலுகைகளும் பெறலாம். மேலும் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

