பாரத ஸ்டேட் வங்கி (SBI) 1146 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. VP வெல்த், AVP வெல்த், மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
பாரத ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தனது கிளைகள் மூலம் பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. 22,542 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். இந்த வங்கியின் மூலமாக அதிகளவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, இந்தியாவிலேயே பெரிய வங்கி என்பது மட்டுமல்ல, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியும். வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாதான்.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் 1146 காலிப் பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்றை கடைசி நாளாகும்.
VP Wealth (SRM)
காலியிடங்களின் எண்ணிக்கை:
582
கல்வித் தகுதி:
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். மேலும் 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு
26 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ. 44.70 லட்சம்
AVP Wealth (RM)
காலியிடங்களின் எண்ணிக்கை:
237
கல்வித் தகுதி:
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு
23 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ. 30.20 லட்சம்
Customer Relationship Executive
காலியிடங்களின் எண்ணிக்கை:
327
கல்வித் தகுதி:
வாடிக்கையாளார் தொடர்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். நல்ல கம்யூனிகேஷன் திறன் மற்றும் நிதி சார்ந்த பிரிவுகளின் ஆவணப்படுத்துதல் பிரிவில் பணியாற்றியிருந்தால் முன்னுரிமை தரப்படும்.
வயது வரம்பு
வாடிக்கையாளர் தொடர்பு எக்ஸியூட்டிவ் பணிக்கு 20 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ. 6.20 லட்சம்
வயது வரம்பு தளர்வு:
எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஜனவரி 10
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


