தாறுமாறாக ஏறும் தங்கம் விலை! கொஞ்ச நாளில் புதிய உச்சம்! ஆனந்த் சீனிவாசன் அலர்ட்!
இன்னும் கொஞ்ச நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பங்குச்சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7455 ஆக உள்ளது. இன்னும் 155 ரூபாய் கூடினால் புதிய உச்சத்தையும் எட்டிவிடும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டு வருவது தங்கம் விலை அதிகரிக்க முக்கியக் காரணம் என்று ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார். கடந்த 2 ஆண்டுகளாகவே வரலாறு காணாத அளவுக்கு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் கூடும் என்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறையும் என்றும் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 90 ரூபாய் அளவுக்குக் குறைய வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதத்திலேயே 86 ரூபாயை எட்டிவிட்டால், அடுத்தடுத்த மாதங்களில் 87, 88 என ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காண வாய்ப்பு உள்ளது. அமெரிக்க சந்தை நிலவரத்தைப் பார்க்கும்போது 90 ரூபாயைக்கூடத் தொடலாம் என ஆனந்த் சீனிவாசன் சொல்கிறார்.