Amazon: ரூ.2,000 கோடி முதலீடு!படிக்காதவர்களுக்கும் வேலை! கிராம பகுதிகளில் ஆலை!
அமேசான் இந்தியாவில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

இந்தியாவில் அமேசான்
இந்தியாவில் Amazon என்ற பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்பது மிகையல்ல. நகர் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் கிராப்புற பகுதியினருக்கும் ஆர்டர் செய்த பொருட்களை எல்லாம் சரியான நேரத்திற்கு டெலிவரி செய்யும் அமேசான் இந்தியாவில் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான இந்திய கிராமங்கள் உள்கட்டமைப்பு ரீதியில் மேம்படுவதுடன் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு
அமேசான் நடப்பாண்டில் ரூ.2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு, லாஜிஸ்டிக்ஸ் வசதிகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகள்
அமேசான் தனது fulfilment center-கள், sortation hub-கள், distribution network ஆகியவற்றை புதிதாக உருவாக்குவதால், பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். அமேசானின் ‘Smbhav Venture Fund’ மூலமாக தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்புகள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகள் அதிகரிக்கப்படவுள்ளது. இது தனியார் மற்றும் கிராமப்புற தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும்.
ஏற்றுமதி வாய்ப்பு:
இந்தியாவில் இருந்து 6 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வினியோகம் மற்றும் ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும், 2030க்கும் இந்த இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உடை, கைத்தறி பொருட்கள், ஹேண்ட்மேட் ஜுவல்லரி, Ayurvedic/Herbal பொருட்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றை உலக சந்தையில் விற்கும் வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தும்.குறிப்பாக கிராமப்புற உற்பத்தியாளர்கள் மற்றும் MSME களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
கிராமப்புற மக்களுக்கு பயன்கள்
நிறுவப்பட்ட fulfillment மற்றும் delivery center-கள் பெரும்பாலும் பெருநகரத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில் ஏற்படுத்தப்படும். இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.படிப்பு இல்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறும் பொருளாதார நிபுணர்கள் பேக்கிங், லோடிங், டெலிவரி உள்ளிட்ட வேலைகள் கிராமப்புற இளைஞர்களுக்குப் பெரிதும் கிடைக்கும். மேலும் பாதுகாப்பான சூழ்நிலையில் மகளிருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகள் உருவாகும்.
கிராம வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு
- பாதுகாப்பான வேலை சூழ்நிலை மற்றும் நலன் சார்ந்த திட்டங்கள் ஊடாக கிராமப்புற வாழ்க்கை தரம் மேம்படும்.
- இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் வழியாக தொழில் திறன் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, போன்ற வேலைகளும் உருவாகும்.
- இணைப்பு சாலை, கட்டிடம், வெயர்ஹவுஸ் போன்ற கட்டுமானங்கள் ஊடாக உள்கட்டமைப்பில் வளர்ச்சி ஏற்படும்.
இத்தகைய முதலீடுகள், இன்றைய இந்தியாவின் கிராமங்களையும் உலக தரத்தில் பொருளாதார மையங்களாக மாற்றும் திறன் கொண்டவை என்பதை உறுதியாகக் கூறலாம்.