Airport Rules: விமானத்தில் இதை கொண்டுபோனா ஆயிரக்கணக்கில் அபராதம்!
துபாய் விமான நிலையம் சில மருந்துகளை கைப்பையில் எடுத்துச் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அபராதங்களை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பொருட்களின் பட்டியலை சரிபார்த்து, தேவையான மருத்துவ சான்றிதழ்களுடன் பயணிக்கவும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
உற்சாகம் அளிக்கும் விமானப்பயணம்
விமானப்பயணம் என்றாலே பெரும்பாலோனோருக்கு சந்தோஷம்தான். உள்ளூரோ வெளியூரோ விமானத்தில் பயணிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமும், உற்சாகமும் யாருக்கும் சொல்லி விளங்க வைக்க முடியாது. விமானத்தில் பயணிப்போர் அதுவும் வெளிநாடுகளுக்கு செல்வோர் விமான நிலைய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனில் அவர்கள் கடும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விதிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்
வெளிநாடு செல்வோர் சில பொருட்களை கொண்டு செல்லவே கூடாது என்ற விதிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. அதேபோல் சில பொருட்களை ஹேண்ட் லக்கேஜில் கொண்டு போகக்கூடாது, ஆனால் மெயின் லக்கேஜில் கொண்டு செல்லலாம். விமானநிலைய விதிமுறைகளை தெரிந்துகொள்ளாத சிலர், தேவையில்லால பொருட்களை கொண்டு சென்று சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.
ஆவணங்களை சரிபார்ப்பது கட்டாயம்
விமானப் பயணத்திற்குத் தயாராகும் போது, அனைவரும் தங்கள் தேவையான உடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஆவணங்களை ஒழுங்காக பெட்டிகளில் அடுக்கி வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது துபாய் விமான நிலையம் சில கடுமையான விதிமுறைகளை அறிவித்து, பல பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விமான பயணத்தின்போது உங்கள் கைபையில் சில மருந்துகளை வைத்திருந்தால், தற்போது கடுமையான அபராதம் விதிக்கும் நிபந்தனை அமலில் உள்ளது. மேலும் விதிமுறையை மீறுவோர் அங்கு செல்லவே முடியாத சூழலும் ஏற்படும்.
ஆயிரக்கணக்கில் அபராதம்
துபாய் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் இனி புதிய விதிகளின்படி சில மருந்துகள் மற்றும் பொருட்களை தங்கள் கைப்பைகளிலும், மெயின் லக்கேஜில் இருந்தால் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த விதிகளை மீறினால் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும், மேலும் சிறையிலும் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதிய விதிகள் – துபாய் விமானப் பயணிகள் கவனம்!
முன்னையதைப் போல அல்லாமல், இனி துபாய் நோக்கி செல்லும் விமானங்களில் தம்முடன் கொண்டு செல்லும் மருந்துகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மருந்துகள், பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
பையில் வைத்துக்கொள்ளக் கூடாத மருந்துகள் :
பெட்டாமெத்தடோல்
ஆல்பா-மெத்தில்ஃபென்டனில்
கனாபிஸ்
மெதடோன்
கொடோசைம்
ஆக்ஸிகோடோன்
கேத்தினோன்
டிரைமெபெரிடைன்
கொடீன்
போப்பி ஸ்ட்ரா கண்டன்சரேட்
ஃபென்டனில்
ஆம்பெட்டமின்
தடைசெய்யப்பட்ட மற்ற பொருட்கள்
பீடல் நட், சில மூலிகைகள்
மூன்று அடுக்கு மீன்பிடி வலைகள்
எண்ணெய் ஓவியங்கள்,
சில புகைப்படங்கள் மற்றும் வரலாற்று புத்தகங்கள்
கல்லால் ஆன சிற்பங்கள்
சில மதபரிபாட்டுப் பொருட்கள்
போலி ரூபாய் நோட்டுகள்
அனுமதியுடன் கொண்டு செல்லலாம்
மருத்துவ உபகரணங்கள்,
சில அனுமதிக்கப்பட்ட மருந்துகள்
பவுடர்கள், பியூட்டி கிரீம்கள்
வயர்லெஸ் சாதனங்கள்
மது, இ-சிகரெட், இ-ஹூகா
பயணத்திற்கு முன் செய்ய வேண்டியவை:
மருந்துகளின் பட்டியல்: நீங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகள் துபாயில் அனுமதிக்கப்படுகிறதா என்பதை அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்க்கவும்.
மருத்துவர் சான்றிதழ்: தேவையான மருந்துகளுக்கு மருத்துவரின் அளித்த சான்றிதழை எடுத்துச் செல்லுங்கள்.
புதிய விதிகளை படிக்கவும்: யாத்திரைக்கு முன் துபாய் விமான நிலைய அதிகாரபூர்வ தளத்தில் (Dubai Customs, GDRFA) விதிகளை வாசிக்கவும்.
பையை பரிசோதனை செய்யுங்கள்: உங்கள் கைபையிலும், மெயின் லக்கேஜிலும் மருந்துகள் தவறுதலாக கூட சேரவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும்
தடை செய்தி ஏன்?
துபாய் உள்ளிட்ட பல வளரும் நாடுகள், போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மருந்துகள் வழியாக போதைப் பொருட்கள் கொண்டு வரப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
பயணங்கள் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறினால் சிறையில் முடிவதற்கும், பயண அனுபவம் நெருக்கடியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, குறிப்பாக துபாய் போன்ற கடுமையான சட்டத்திட்டங்களை கொண்ட நாடுகளுக்கு செல்லும் முன், உங்கள் கைப்பை, மருந்துகள் மற்றும் சாமான்களை சரியாக ஆய்வு செய்து, அனைத்து விதிகளையும் பின்பற்றுங்கள். புதிய விதிகள் உங்கள் பயண அனுபவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, துபாய் பயணத்திற்கு முன் மருந்துகளையும், உபயோகப்படுத்தும் பொருட்களையும் சரிபார்த்து பயணிக்கவும். பயணத்திற்கு முன் திட்டமிட்டு, சட்டங்களை மதித்து சந்தோஷமாக பயணியுங்கள்!