AC Bed Sheet: ஏசி பெட்சீட் தெரியுமா? அதுவும் வெறும் ரூ.699 தான்! இதை வாங்கிட்டா ஜில்லுனு தூக்கம் வர்றது உறுதி!
AC Bed Sheet: கொளுத்தும் வெயிலில் இருந்து தப்ப ஏசி, ஏர் கூலர்களை வாங்க முடியாதவர்களுக்கு இப்போது அறிமுகமாகியுள்ள ஏசி பெட்ஷீட்டுகள் வரப்பிரசாதம்.
வெயில் காலத்தில் குளுமையை உடல் தேடும். அதுவும் அக்னி நட்சத்திரத்தில் சருமம் எரியும் அளவுக்கு வெயில் நம்மை வாட்டி எடுக்கும். சிலர் வசதிக்கேற்ப வீட்டில் ஏசி அல்லது ஏர் கூலர்களை பொருத்துவார்கள். ஆனால் எல்லோர் பட்ஜெட்டிலும் இது சரிவராது. அவர்களுக்காகவே சந்தையில் ஏசி பெட் ஷீட்கள் அறிமுகமாகியுள்ளன. அதுவும் விலையும் மலிவு. ஏசி பெட்ஷீட் என்றால் கூலிங் ஜெல் மெத்தை எனலாம்.
இந்த ஏசி பெட்ஷீட்டின் தனித்துவமே இதை நாம் படுக்கையில் விரித்ததும் ஐஸ் போல குளிர்ச்சியை பரப்பிவிடும். குளுமையான உறக்கத்திற்கு ஏசி பெட்ஷீட்கள் நல்ல தேர்வாக இருக்கும். இதை ஆன்லைனில் வாங்கலாம். ஏசி பெட்ஷீட்டின் சிறப்புகளை குறித்து இங்கு காணலாம்.
ஏசி பெட்ஷீட்கள் சிறப்பம்சங்கள்:
ஏர் கண்டிஷனர், ஏர் கூலர் ஆகியவற்றில் இருப்பது போல இந்த பெட் ஷீட்டில் மின்விசிறிகள் இல்லை. அதற்கு பதிலாக குளிர்ச்சியை அளிக்கும் ஜெல் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் இருப்பதால் படுக்கையை விரித்ததும் எந்த அதிர்வும் இல்லாமல் செட் ஆகிவிடுகிறது.
வாட்டர் பெட் போல இந்த ஏசி பெட்ஷீட்களை விரித்து படுத்ததும் குளிர்ச்சியை உணர முடியும். கோடை காலத்தில் இந்த வகை பெட்ஷீட் வாங்கி வைத்தால் நிம்மதியான உறக்கம் உறுதி. அதனால் தான் மக்கள் கோடையில் இந்த பெட்ஷீட்களை போட்டி போட்டு வாங்குகிறார்கள். கூலிங் ஜெல் படுக்கை விரிப்பை ஆன்லைனில் ஆர்டர் செய்ய வெறும் 699 ரூபாய் தானாம். இப்போது தள்ளுபடி விலைகளில் கூட வாங்க முடியும்.
தரமான பெட்ஷீட்டின் விலை அதனுடைய பிராண்ட், சிறப்பம்சங்களைப் பொறுத்து வேறுபடும். நம்மூரில் வாங்க வேண்டுமென்றால் அமேசானில் பாருங்கள். அதில் இந்த ஏசி பெட்ஷீட் என சொல்லப்படுன் கூலிங் ஜெல் மெத்தை விற்கப்படுகின்றன. இதை பயன்படுத்தும்போது தண்ணீரில் கழுவக்கூடாது. ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: