ஆதார் புதிய அப்டேட்: வீட்டில் இருந்தே இதை மாற்றலாம்! சில நிமிடம் போதும்!!
ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லாமல், mAadhaar செயலி மூலம் வீட்டிலிருந்தே OTP மற்றும் முக அங்கீகாரம் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை உடனடியாகப் புதுப்பிக்கலாம். அது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆதார் மொபைல் நம்பர் அப்டேட்
இதுவரை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. வரிசையில் நிற்க வேண்டும், படிவம் நிரப்ப வேண்டும், கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த சிக்கல் விரைவில் முடிவுக்கு வருகிறது. புதிய முறை மூலம் வீட்டிலிருந்தே மொபைல் எண்ணை புதுப்பிக்கலாம்.
புதிய முறையின்படி, ஆதார் செயலியில் உங்கள் பதிவு எண்ணை மாற்றலாம். இது இரண்டு படிகளைக் கொண்டது. முதலில் OTP சரிபார்ப்பு, பின்னர் முக அங்கீகாரம். உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, ஆதார் தரவுடன் பொருந்தினால், புதிய மொபைல் எண் உடனடியாகப் புதுப்பிக்கப்படும்.
ஆதார் அப்டேட் முறை
இந்த புதிய அப்டேட் தொலைதூரங்களில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் பராமரிப்பில் பிஸியாக இருக்கும் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வெளியே செல்ல முடியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணச் செலவு, நேரம் மற்றும் வரிசையில் நிற்கும் சிரமம் இனி இல்லை.
- முதலில் mAadhaar செயலியை பதிவிறக்கவும்.
- 'Update Mobile Number' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆதார் எண் & புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- வந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- முக அங்கீகாரம் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
- பொருந்தியவுடன், எண் ஆதாரில் புதுப்பிக்கப்படும்.
பழைய முறையில், மையத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி, வரிசையில் நின்று, கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் புதிய முறையில் சில நிமிடங்களில் எண் புதுப்பிக்கப்படும். பயணச் செலவு, வரிசை இல்லை. முக அங்கீகாரம் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

