வீட்டில் இருந்தே ஆதாரை அப்டேட் செய்யலாம்.. ரூல்ஸ் மாற்றம்.. முழு விபரம் இதோ!
நவம்பர் 1 முதல், ஆதார் விவரங்களை ஆவணங்கள் இன்றி ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மேலும், பான்-ஆதார் இணைப்பு டிசம்பர் 31-க்குள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் நிதி பரிவர்த்தனைகள் தடைபடலாம்.

ஆதார் விதிகள் மாற்றம்
நவம்பர் 1 முதல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சேவை மையத்திற்கு செல்லாமலேயே ஆன்லைனில் புதுப்பிக்க அனுமதி உள்ளது. பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே புதுப்பிக்க முடியும். புதிய விதிகள் படி, அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஆதார் சேவை
UIDAI அரசு தரவுத்தளங்களில் உள்ள தகவல்களுடன் தானாகவே சரிபார்க்கப்படும். ஆனால், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பதற்காக சேவை மையங்களுக்கு செல்வது அவசியம். இதனால், சேவை மையங்களில் வரிசையில் நிற்கும் சிரமம் குறையும் மற்றும் நேரத்தைச் சேமிக்க முடியும்.
பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்
அதே நேரத்தில், பான் கார்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் டிசம்பர் 31-க்குள் இந்த இணைப்பைச் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு இணைக்கப்படாத பான் கார்டுகள் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கச் செய்யப்படும்.
பெரிய நிதி பரிவர்த்தனைகளுக்கு தடைகள்
பான்-ஆதார் இணைப்பு செய்யப்படாவிட்டால், மியூச்சுவல் ஃபண்டுகள், டீமேட் கணக்குகள் போன்ற நிதி பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இது இந்திய நிதி சேவைகளில் முக்கியமான கட்டாய நடவடிக்கை ஆகும்.
ஆதார் சேவை கட்டணங்கள்
UIDAI தற்போது ஆதார் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. தற்போது 50 ரூபாயாக வசூலிக்கப்படும் சேவைகள் 75 ரூபாய் ஆகும், 100 ரூபாயாக இருந்த சேவைகள் 125 ரூபாய் ஆக உயர்கிறது. இந்த கட்டண உயர்வு 2028 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
எதிர்கால கட்டண மாற்றங்கள்
2028 அக்டோபர் 1 முதல், கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து, 75 ரூபாய் சேவைகள் 90 ரூபாய் மற்றும் 125 ரூபாய் சேவைகள் 150 ரூபாய் ஆகும். ஆதார் அட்டைதாரர்கள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே கவனித்து புதுப்பிப்புகளை செய்ய வேண்டும்.