ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு; எதெல்லாம் இலவசம்.?
UIDAI ஆதார் அப்டேட் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பெயர், முகவரி போன்ற திருத்தங்களுக்கு ரூ.75, உயிர் அளவீட்டு அப்டேட்டிற்கு ரூ.125 வசூலிக்கப்படும். மேலும் ஆன்லைன் திருத்த வசதியும் அறிமுகமாகிறது.

ஆதார் கார்டு அப்டேட்
ஆதார் கார்டு அப்டேட்டில் UIDAI பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அக்டோபர் 1, 2025 முதல் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது மொபைல் அப்டேட் செய்ய ரூ.75 (முன்பு ரூ.50) கட்டணம் வசூலிக்கப்படும். உயிர் அளவீட்டு அப்டேட்டுக்கான (விரல் ரேகை, கண் ஸ்கேன், புகைப்படம்) கட்டணம் ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகள்
ஆனால், 7 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு விரல் ரேகை மற்றும் கண் ஸ்கேன் அப்டேட் முழுவதும் இலவசம். குழந்தைகளின் முகமும் விரல் ரேகையும் காலப்போக்கில் மாறுவதால் இதை அவசியமாகச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளும் இதற்காக UIDAI உடன் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஆதார் அப்டேட்
ஜூலை 2025ல் UIDAI புதிய ஆவண பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள், NRIக்கள், OCI கார்டு வைத்திருப்போர் மற்றும் HUFக்களுக்கும் ஒரே விதிமுறைகள் பொருந்தும். ஒருவருக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே அனுமதி; நகல் ஆதார் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1
நவம்பர் 1, 2025 முதல் புதிய டிஜிட்டல் அப்டேட் சிஸ்டம் தொடங்குகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் திருத்தலாம். கிராமப்புற மக்களுக்கு இது பெரும் நிவாரணமாகும்.