அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
2025 ஜனவரி-ஜூன் சுழற்சிக்கான அகவிலைப்படி (DA) உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். AICPI குறியீட்டின் அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது, மேலும் அடுத்த உயர்வு பிப்ரவரி இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி-ஜூன் சுழற்சிக்கான அகவிலைப்படி (DA) உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) அறிவிக்கிறது. ஆண்டின் பாதியில் ஒரு முறையும், இரண்டாம் பாதியில் ஒருமுறையும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு திருத்துகிறது.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்பட்டும். AICPI பல பொருட்கள் மற்றும் சேவைகளின் சராசரி விலையை வைத்து பணவீக்க போக்குகளை கண்காணிக்கிறது. இதன்படி ஜனவரி-ஜூன் தவணை அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission- Govt Employees Likely To Get DA Hike Arrears in April Sal
ஜனவரி-ஜூன் சுழற்சியில் மத்திய அரசு ஊழியர்கள் எவ்வளவு DA உயர்வு எதிர்பார்க்கலாம்? அக்டோபர் 2024 நிலவரப்படி, AICPI 144.5 ஆக உயர்ந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் தரவு வந்தவுடன் இது 145.3 ஆக உயரும் என்று கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஜனவரி 2025 இல் அகவிலைப்படி உயர்வு 56% ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, 53% அகவிலைப்படி கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசால் அறிவிக்கப்படும்? இறுதி DA கணக்கீட்டிற்கு, நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 தரவு தேவைப்படும். நவம்பர் தரவு ஜனவரி 1வது வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் தரவு பிப்ரவரி 2025 இல் வரும். அதாவது அடுத்த அகவிலைப்படி அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் வரலாம்.
கடந்த காலப் போக்குகளின்படி, அரசாங்கம் இரண்டு மாத கால தாமதத்துடன் ஆறு மாத சுழற்சிக்கான DA உயர்வை அறிவிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்குவதாகவும் கூறுகின்றன.
அக்டோபர் 16, 2024 அன்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தீபாவளி நேரத்தில் 50% இல் இருந்து 53% ஆக அதிகரித்தது. இந்த முடிவால் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.
முன்னதாக, மார்ச் 2024 இல், ஜனவரி-ஜூன் சுழற்சிக்கான அகவிலைப்படியை 4% அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் மூலம் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% ஆக உயர்த்தது. அந்த அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வந்தது.