MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Loan: நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!

Gold Loan: நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!

Gold Loan: அவசரப் பணத்தேவைக்கு நகைக்கடன் வாங்கும் முன் இந்த 5 முக்கிய விஷயங்களைக் கண்டிப்பதாக தெரிந்துகொள்ளுங்கள். தவறினால் உங்கள் தங்கம் ஏலத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 24 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gold Loan நகைக்கடன் வாங்குறீங்களா? இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
Image Credit : AI

Gold Loan - நகைக்கடன் வாங்குறீங்களா? இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

அவசரப் பணத் தேவைக்குத் தங்கத்தை விற்பனை செய்யாமல், கடன் பெறுவது ஒரு சிறந்த தீர்வாகும். இருப்பினும், கடன் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவசரமாக முடிவெடுத்து, அதிகத் தொகையைக் கடனாகப் பெறக் கூடாது. முதன்முறையாகக் கடன் பெறுபவர்கள், தங்களின் மாதாந்திரத் திருப்பிச் செலுத்தும் திறனை முன்கூட்டியே கணக்கிடுவது அவசியமாகும். சமீபத்தில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.

இதையும் படிங்க: D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தேவைக்கு அதிகமாக பெறுவது பாதுகாப்பற்றது
Image Credit : ChatGPT

தேவைக்கு அதிகமாக பெறுவது பாதுகாப்பற்றது

இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இதன் விலை அதிகமாகவே உள்ளது. இதனால், குறைந்த அளவு தங்கத்திற்கும் தற்போது அதிகக் கடன் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வங்கிகள் அதிகக் கடன் தொகையை வழங்க முன்வந்தாலும், தேவைக்கு அதிகமாகப் பெறுவது பாதுகாப்பற்றது ஆகும். எனவே, கடன் பெறத் தகுதி இருந்தாலும், உண்மையான தேவை மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். தகுதிக்குக் குறைவான தொகையைக் கடனாகப் பெறும்போது, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடன் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: பெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?

Related Articles

Related image1
Gold Loan : உங்கள் தங்க நகையை வங்கி எப்போது ஏலம் விடும் தெரியுமா?
Related image2
Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
36
மறைமுகக் கட்டணங்களையும் கவனிங்க‌
Image Credit : Chatgpt

மறைமுகக் கட்டணங்களையும் கவனிங்க‌

பொதுவாகக் கடன் பெறும்போது வட்டி விகிதத்தை மட்டுமே பலரும் கவனத்தில் கொள்கின்றனர். ஆனால், அதனுடன் இணைந்த பல்வேறு மறைமுகக் கட்டணங்களையும் அறிவது அவசியமாகும். பரிசீலனைக் கட்டணம் (Processing fees), மதிப்பீட்டுக் கட்டணம் (Appraisal charges), முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான கட்டணம் (Foreclosure charges) மற்றும் தாமதக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட வேண்டும். மேலும், உள்ளூர் அடகுக் கடைகளைத் தவிர்த்து, இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் (NBFC) கடன் பெறுவது பாதுகாப்பானது. இங்குத் தங்கத்திற்குப் பாதுகாப்பான பெட்டக (Locker) வசதியும், காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைக்கும்.

இதையும் படிங்க: Toilet Cleaning: இனி மணிக்கணக்கில் தேய்க்க தேவையில்லை! டாய்லெட் கறைகளை நொடியில் போக்க சூப்பர் டிப்ஸ்!

46
கடன் பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
Image Credit : istock

கடன் பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

நகைக்கடன் வாங்கும்போது கீழ்க்காணும் விஷயங்களை கவனியுங்க.

உண்மையான தேவைக்கு மட்டுமே கடன் பெற வேண்டும்.

18 முதல் 22 காரட் தூய்மை கொண்ட தங்கத்திற்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

நகைகளில் உள்ள கற்கள் மற்றும் முத்துக்களின் எடையைக் கழித்து, சுத்தமான தங்கத்தின் எடை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

வட்டி விகிதத்துடன் சேர்த்துப் பரிசீலனைக் கட்டணங்களையும் ஒப்பீடு செய்து சரிபார்க்க வேண்டும்.

56
மாதாந்திரத் தவணையை தேர்வு செய்யுங்கள்
Image Credit : Gemini AI

மாதாந்திரத் தவணையை தேர்வு செய்யுங்கள்

சந்தையில் தங்கத்தின் விலை திடீரெனக் குறையும்போது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த கடன்-மதிப்பு விகிதம் (LTV) மாறுபடும். அதாவது, தங்கத்தின் மதிப்பு குறையும்போது, வழங்கப்பட்ட கடன் தொகை வங்கிக்கு நிதிச் சுமையாக மாறக்கூடும். இத்தகைய சூழலில், வங்கிகள் 'மார்ஜின் கால்' (Margin calls) அறிவிப்பை வெளியிடும். அதன்படி, நிலுவை தொகையின் வித்தியாசத்தைச் சரிசெய்யக் கூடுதல் தொகையைச் செலுத்தவோ அல்லது கூடுதல் தங்கத்தைப் பிணையமாக வைக்கவோ கோருவார்கள். 'புல்லட் ரீபேமென்ட்' (Bullet repayment) முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இத்தகைய அபாயம் அதிகமாகும். எனவே, மாதாந்திரத் தவணை (EMI) முறையைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

66
இப்படி செய்தால் நகைகள் ஏலத்துக்கு போகாது
Image Credit : Chatgpt

இப்படி செய்தால் நகைகள் ஏலத்துக்கு போகாது

நகைக்கடன்கள் பொதுவாக 3 முதல் 12 மாதங்கள் வரையிலான குறுகிய கால அளவிலேயே வழங்கப்படுகின்றன. வங்கிகள் முதன்மையாக நான்கு வகையான திருப்பிச் செலுத்தும் முறைகளை வழங்குகின்றன:

பகுதித் தவணைகள் (Part payments)

மாதாந்திர வட்டி மட்டும் செலுத்தி, இறுதியில் அசலைச் செலுத்தும் முறை

புல்லட் ரீபேமென்ட் (அசல் மற்றும் வட்டியை இறுதியாக மொத்தமாகச் செலுத்துதல்)

வழக்கமான மாதாந்திரத் தவணை முறை (EMI)

உங்களின் மாதாந்திர வருமானம் மற்றும் பணப்புழக்கத்திற்கு ஏற்பப் பொருத்தமான முறையைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், வங்கியிலிருந்து பெறப்படும் அறிவிப்புகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதன் மூலம், நகைகள் ஏலத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்க நகை கடன்
தங்க நகை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: ஆடி தள்ளுப்படியா?! ஒரே நாளில் ரூ.2,000 குறைந்த தங்கம் விலை.! நாளைக்கும் காத்திருக்குமா இந்த ஜாக்பாட்.!
Recommended image2
D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!
Recommended image3
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!
Related Stories
Recommended image1
Gold Loan : உங்கள் தங்க நகையை வங்கி எப்போது ஏலம் விடும் தெரியுமா?
Recommended image2
Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved