MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் மேடையில் தங்கச்சிக்கே வில்லனாக மாறிய அண்ணன் - யார் இந்த அவினாஷ்?

Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் மேடையில் தங்கச்சிக்கே வில்லனாக மாறிய அண்ணன் - யார் இந்த அவினாஷ்?

Bigg Boss Contestant Avinash : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டான்சர் அவினாஷ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அவரைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2026, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
யார் இந்த அவினாஷ்?
Image Credit : youtube/jiohotstartamil

யார் இந்த அவினாஷ்?

சின்னத்திரையில் ஹீரோவாக பார்த்தாச்சு; டான்ஸ் திறமையை பார்த்தாச்சு; இப்போது அந்த அனுபவங்களோடு நேராக பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கி இருக்கிறார் அவினாஷ் அசோக். தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகரும் நடனக் கலைஞருமான அவினாஷ் அசோக், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். சீரியல் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான முகமான அவினாஷின் இந்த ரியாலிட்டி ஷோ என்ட்ரி, அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சின்னத்திரையில் தனி அடையாளம்!
Image Credit : Jio Hotstar ScreenShot

சின்னத்திரையில் தனி அடையாளம்!

அவினாஷ் அசோக்கின் சின்னத்திரை பயணம் பல பிரபலமான தொடர்களை கடந்து வந்துள்ளது. குறிப்பாக ‘கயல்’, ‘அனியத்திப்ராவு’ போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். அதன்பிறகு ‘மகளே என் மருமகளே’ தொடரில் சின்னத்தம்பி என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்தார். வர்ஷினி சுரேஷுக்கு ஜோடியாக நடித்த இந்தத் தொடர், அவினாஷுக்கு சின்னத்திரையில் மேலும் ஒரு முக்கியமான அடையாளத்தை உருவாக்கியது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து நகர்ந்த இந்தத் தொடரில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது சீரியல் கதாபாத்திரத்தை விட்டு ரியாலிட்டி ஷோ களத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

Related Articles

Related image1
Bigg Boss Tamil 10 : சினிமா கனவோடு பிக் பாஸ் வந்துள்ள சீரியல் ஹீரோ... யார் இந்த வினோத் பாபு?
Related image2
Bigg Boss Tamil 10: ஜெர்மனியில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ப்ரித்வி... இவர் யார் தெரியுமா?
33
அவினாஷ் சாதிப்பாரா?
Image Credit : Jio Hotstar ScreenShot

அவினாஷ் சாதிப்பாரா?

சீரியல் உலகில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். வசனம் இருக்கும். காட்சி எப்படி நகர வேண்டும் என்பதற்கும் ஒரு இயக்கம் இருக்கும். ஆனால் பிக் பாஸ் வீட்டில்... “ஸ்கிரிப்ட் இல்லை... ரீடேக் இல்லை... கேரக்டர் இல்லை!” அங்கே இருப்பது அவினாஷ் மட்டுமே! 24 மணி நேர கேமரா கண்காணிப்பு, தினசரி டாஸ்குகள், நாமினேஷன், நட்பு, கருத்து மோதல் என ஆட்டம் ஒவ்வொரு நாளும் வேறு பாதையில் செல்லும். இதனால் சீரியலில் ரசிகர்கள் பார்த்த அவினாஷுக்கும், பிக் பாஸ் வீட்டில் அவர்கள் பார்க்கப் போகும் அவினாஷுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதே இப்போது பேசுபொருளாக உள்ளது.

டாஸ்க்கிலும் தெறிக்க விடுவாரா?

அவினாஷின் இன்னொரு பலம் அவரது நடனப் பின்னணி. மேடை மற்றும் கேமரா முன் அவருக்கு இருக்கும் அனுபவம், பிக் பாஸ் டாஸ்குகளில் அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அவினாஷின் டான்ஸ் அனுபவம் இங்கே எந்த அளவுக்கு கைகொடுக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்! சின்னத்திரையில் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்த அவினாஷ், பிக் பாஸ் வீட்டில் எந்த ரூட்டை தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் அடுத்த கேள்வி. அமைதியாக இருந்து ஆட்டத்தை கண்காணிப்பாரா? நட்பை வைத்து கேமை நகர்த்துவாரா? டாஸ்குகளில் அதிரடி காட்டுவாரா? அல்லது கருத்து மோதல் என்று வந்தால் “இது என் கேம்!” என்று தனது நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss Tamil 10 : விமர்சகர் பிரசாந்தை விட அதிக ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் - யார் இந்த ஜாவித்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : விமர்சகர் பிரசாந்தை விட அதிக ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் - யார் இந்த ஜாவித்?
Recommended image2
Bigg Boss Tamil 10 : மாற்றம் தேடி பிக் பாஸ் வந்த மதுரைப் பொண்ணு... யார் இந்த முத்தழகி?
Recommended image3
Bigg Boss Tamil 10 : பிக் பாஸை அதிரவிடப்போகும் மேக்கப் ஆர்டிஸ்ட்... யார் இந்த அஸ்மிதா?
Related Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : சினிமா கனவோடு பிக் பாஸ் வந்துள்ள சீரியல் ஹீரோ... யார் இந்த வினோத் பாபு?
Recommended image2
Bigg Boss Tamil 10: ஜெர்மனியில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ப்ரித்வி... இவர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved