- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- இவ்ளோ நாள் பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர்... இப்போ சீசன் 9-ல் போட்டியாளராக இருக்கிறார் - யார் அவர்?
இவ்ளோ நாள் பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர்... இப்போ சீசன் 9-ல் போட்டியாளராக இருக்கிறார் - யார் அவர்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் உயிர்நாடியாக இருப்பது அதன் பின்னணியில் இருக்கும் குரல் தான். அப்படி பிக் பாஸாக குரல் கொடுத்து வந்த நபர் தற்போது சீசன் 9-ல் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

Bigg Boss Tamil Season 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு, அதில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் எலிமினேட் ஆன பின்னர் கடந்த வாரம் நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களின் எண்ட்ரிக்கு பின்னர் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வந்த வேகத்தில் ஒவ்வொருவரின் முகத்திரையையும் கிழித்து தொங்கவிட்டனர்.
ஹோட்டல் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீடு ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறி இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இந்த டாஸ்க் நடைபெற்ற போது, போட்டியாளர்களில் சிலரே கெஸ்ட் ஆகவும் பங்கேற்பார்கள். ஆனால் இந்த சீசனில் புது முயற்சியாக, இதற்கு முந்தையை சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை கெஸ்டாக களமிறக்கி இருக்கிறார்கள். அதன்படி தீபக், பிரியங்கா மற்றும் மஞ்சரி ஆகியோர் கெஸ்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு போட்டியாளரா?
பிக் பாஸ் என்று சொன்னதும் அனைவருக்கும் முதலில் நியாபகத்துக்கு வருவது அந்த முகம் தெரியாத நபரின் குரல் தான். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் யார் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சாஷோ என்பவர் தான் அது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படி கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்து வந்த ஒருவர் தான் தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனுக்கு வாய்ஸ் கொடுத்ததாக பேட்டியிலேயே கூறி இருக்கிறார்.
யார் அந்த போட்டியாளர்?
அந்த போட்டியாளர் வேறுயாருமில்லை... அமித் பார்கவ் தான். இவர் தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அமித் பார்கவ் ஒரு சீரியல் நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். இவர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார். அதன் பின்னர் சின்னத்திரையில் ஏராளமான தொடர்களில் நடித்த அமித், தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். அவர் எத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.