MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss Tamil 10 : பிக் பாஸில் அதகள எண்ட்ரி கொடுத்த கோமாளி... யார் இந்த அன்சர்?

Bigg Boss Tamil 10 : பிக் பாஸில் அதகள எண்ட்ரி கொடுத்த கோமாளி... யார் இந்த அன்சர்?

Bigg Boss Contestant Ansar : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி உள்ள நிலையில், அதில் போட்டியாளராக அன்சர் களமிறங்கி இருக்கிறார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2026, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
யார் இந்த அன்சர்?
Image Credit : youtube/jiohotstartamil

யார் இந்த அன்சர்?

விஜய் டிவியின் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அன்சர். அவரது கலகலப்பான பேச்சு, நகைச்சுவையான அணுகுமுறை மற்றும் என்டர்டைன்மென்ட் கலந்த செயல்பாடுகள் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், அன்சர் அடுத்ததாக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். மேலும், அவர் இந்த சீசனின் 10-வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இவரும் ஒரு விஜய் டிவி புராடக்ட் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கிய அன்சர்
Image Credit : youtube/jiohotstartamil

பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கிய அன்சர்

சமையல் நிகழ்ச்சியில் எப்போதும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் காணப்பட்ட அன்சர், பிக் பாஸ் வீட்டுக்குள் எப்படி இருப்பார் என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள், போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என பல்வேறு சூழ்நிலைகளை போட்டியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த தருணங்களில் அன்சரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காமெடியை வைத்து மட்டுமே இறுதிவரை முன்னேற முடியாது என்பதால் அன்சரின் பன்முகத்திறமை வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
Bigg Boss Tamil 10 : பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஹீரோயின் இப்போ பிக் பாஸ் வீட்டில்... யார் இந்த சாந்தினி தமிழரசன்?
Related image2
Raaghav: இசையமைப்பாளர், டிவி தொகுப்பாளர், ஹீரோ... பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் ராகவ் யார் தெரியுமா?
33
அன்சருக்கு காத்திருக்கும் சவால்
Image Credit : youtube/jiohotstartamil

அன்சருக்கு காத்திருக்கும் சவால்

அவருடைய இயல்பான நகைச்சுவை உணர்வு வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் நல்ல உறவை உருவாக்க உதவுமா? அல்லது போட்டி தீவிரமாகும் போது அவருடைய மற்றொரு முகம் வெளிப்படுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குக் வித் கோமாளியில் சிரிக்க வைத்த அன்சர்... பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாடப் போகிறார்? டாஸ்குகளில் தனது திறமையை நிரூபிப்பாரா, இல்லை நகைச்சுவை மற்றும் என்டர்டைன்மென்ட் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

குக் வித் கோமாளி டூ பிக்பாஸ்

எது எப்படியிருந்தாலும், அன்சரின் என்ட்ரி உறுதியானதால் பிக் பாஸ் தமிழ் சீசன் 10-க்கு இது நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான சேர்க்கையாக இருக்கும். இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சுனிதா, ரம்யா பாண்டியன், கனி, சம்யுக்தா, பிரியங்கா தேஷ்பாண்டே, செளந்தர்யா, பவித்ரா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு இந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அன்சருக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Bigg Boss Tamil 10 : புன்னகையோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முனியம்மாவின் வலிகள் நிறைந்த வாழ்க்கை பற்றி தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : புன்னகையோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முனியம்மாவின் வலிகள் நிறைந்த வாழ்க்கை பற்றி தெரியுமா?
Recommended image2
Bigg Boss Tamil 10 : பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஹீரோயின் இப்போ பிக் பாஸ் வீட்டில்... யார் இந்த சாந்தினி தமிழரசன்?
Recommended image3
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் மேடையில் தங்கச்சிக்கே வில்லனாக மாறிய அண்ணன் - யார் இந்த அவினாஷ்?
Related Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஹீரோயின் இப்போ பிக் பாஸ் வீட்டில்... யார் இந்த சாந்தினி தமிழரசன்?
Recommended image2
Raaghav: இசையமைப்பாளர், டிவி தொகுப்பாளர், ஹீரோ... பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் ராகவ் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved