MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • சம்பள விஷயத்தில் லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி! பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சம்பள விஷயத்தில் லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி! பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜனனி, எலிமினேட் ஆகி வெளியேறிய பின் வாங்கிய சம்பளத்தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2022, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கெடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இவர்கள் இருவருக்குமே இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் கிடைத்தது. இதையடுத்து இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். குறிப்பாக லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நடிப்பில் பிசியாகிவிட்டார்.

35

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனிலும் இலங்கையை சேர்ந்த 2 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஏடிகே மற்றொருவர் ஜனனி. இதில் ஏடிகே பாடகராக அறியப்பட்டவராக இருந்தாலும், ஜனனி புதுமுகமாகவே பங்கேற்றார். இவர் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்கும் முன்பே இவருக்கென டுவிட்டரில் ஆர்மி உருவாக்கினர்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு லீவு விட்டு.. வெள்ளை நிற புடவையில் வேறலெவல் கியூட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்

45

அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது சலிப்படைய செய்தது. இதன்காரணமாக கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

55

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளத்தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். அப்படி பார்த்தால் மொத்தம் இவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 70 நாட்களுக்காக ரூ.17 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கையில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளரான லாஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved