ஓலா, ஏதர் எல்லாம் ஓரம்போ.. டிவிஎஸ்-ன் புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகப் போகுது
டிவிஎஸ் மோட்டார் புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் OLA S1X மற்றும் Bajaj Chetak-ஐ போட்டியிடும் வகையில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் தொடர்ந்து முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. iQube வெற்றியைத் தொடர்ந்து, இப்போது ஒரு புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறதாம். இந்த மாடல் TVS Orbiter அல்லது TVS Indus என்ற பெயரில் வரக்கூடும் எனத் தெரிகிறது. மேலும், ‘EV-One’ மற்றும் ‘O’ என்ற பெயர்களுக்கான டிரேட்மார்க் விண்ணப்பங்கள் டிவிஎஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்
இது entry-level ஸ்கூட்டராக இருக்க வாய்ப்பு அதிகம். iQube-க்கு கீழ் விலைப்பட்டியலில் இடம் பிடிக்கப்போகும் இந்த மாடல், குறைந்த விலைத் தளத்தில் OLA S1X மற்றும் Bajaj Chetak-ஐ நேரடியாக போட்டியிடும். இதன் விலை ரூ.1 லட்சம் அல்லது அதைவிட குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் காலப்பகுதிக்குள் வெளியிடப்படலாம்.
டிவிஎஸ் மின்சார வாகனம்
இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் Bosch நிறுவனம் வழங்கும் hub-mounted electric motor பயன்படுத்தப்படும் என தெரிகிறது. ஆனால் இது iQube-வை விட குறைந்த சக்தி வாய்ந்த மோட்டார் மற்றும் 2.2 kWh-க்கு கீழ் திறன் கொண்ட பேட்டரி கொண்டிருக்கும். அம்சங்களில், இது ஒரு எளிய LCD கான்சோல் மற்றும் சில அடிப்படை இணைப்பு வசதிகளுடன் வரலாம்.
ஓலா போட்டி ஸ்கூட்டர்
இந்நிலையில், தற்போது TVS iQube 6 வகைகளில் விற்பனைக்கு உள்ளது. 2.2 kWh பேஸிக் மாடல் ரூ.1.08 லட்சம், அதிகபட்ச 5.1kWh ST மாடல் ரூ.1.60 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எக்ஸ்ஷோரூம் விலை). புதிய TVS Orbiter இந்த வரம்பை மீறாமல், வாடிக்கையாளர்களை கவரும் விலையில் சந்தையை குறிவைக்கும்.
ரூ.1 லட்சம் கீழ் எலக்ட்ரிக் வாகனம்
எல்லாவற்றையும் பொருத்தும் போது, OLA, Bajaj, Hero Vida போன்ற பிரபல மின்சார பிராண்டுகளுக்கு TVS நிறுவனம் ஒரு வலுவான பதிலடி அளிக்கப் போகிறது எனவே, எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. புதிய மாடல் வெளியானதும், குறைந்த விலையிலேயே தரமான மின்சார ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கலாம்.