- Home
- Auto
- தினமும் ரூ.6 செலவு.. டீ காசு கூட இல்லை.. இந்திய குடும்பங்கள் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்
தினமும் ரூ.6 செலவு.. டீ காசு கூட இல்லை.. இந்திய குடும்பங்கள் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்
இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் குறைந்து, குடும்பங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி நகர்கின்றன. டிவிஎஸ் ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று குடும்பங்களின் நம்பிக்கையான ஸ்கூட்டராக மாறியுள்ளது.

இந்திய குடும்பங்கள் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இதுவரை இந்திய இருசக்கர சந்தையை பெட்ரோல் வாகனங்களே ஆட்சி செய்து வந்தன. நம்பிக்கை, மைலேஜ், மாஸ் பயன்பாடு என்ற மூன்று வார்த்தைகளுக்கு உதாரணமாக இருந்தது பெட்ரோல் ஸ்கூட்டர்களும் பைக்குகளும். ஆனால் இப்போது அந்த கதை மெதுவாக மாறுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பம், தினசரி பயணம் எந்த எல்லைக்குள் நுழைந்திருப்பதே அதற்கான சான்று.
குடும்பங்களின் புதிய தேர்வு
எலக்ட்ரிக் வாகனம் என்றால் சோதனை முயற்சி என்று நினைத்த காலம் முடிந்துவிட்டது. அமைதியான ஓட்டம், எளிதான பராமரிப்பு, குறைந்த செலவு போன்ற காரணங்களால் குடும்ப பயனாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்வு செய்கிறார்கள். எரிபொருள் விலை உயர்வு, அரசின் சலுகைகள் ஆகியவை இந்த மாற்றத்தை வேகப்படுத்துகின்றன.
விற்பனையில் சாதனை
டிசம்பர் 2025 மாதத்தில் ஒரே மாதத்தில் 35,000க்கும் அதிகமான விற்பனையானது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரிய மைல்கல். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் சுமார் 76% வளர்ச்சி. இது எலக்ட்ரிக் வாகனம் இந்த எதிர்காலம் என்ற எண்ணத்தை இதுவே இன்றைய தீர்வு என்று மாற்றியிருக்கிறது.
டிவிஎஸ் ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்த ஸ்கூட்டரில் உள்ள ஹப் மோட்டார், 80 கி.மீக்கு மேல் டாப் ஸ்பீடு, 3–4.5 மணி நேரத்தில் வேகமான சார்ஜிங் ஆகியவை தினசரி பயணத்திற்கு சரியான கூட்டணி. குறைந்த விலை பேட்டரி வேரியண்ட் அறிமுகம், நடுத்தர குடும்பங்களையும் நெருங்க வைத்துள்ளது.
செலவு கணக்கே கண்ணைத் திறக்கும்
டிவிஎஸ் ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று குடும்பங்களின் நம்பிக்கையான ஸ்கூட்டராக மாறியுள்ளது. குறைந்த ஓட்டுச் செலவு, அமைதியான ரைடு, எளிதான சார்ஜிங் வசதி ஆகியவை இதன் பெரிய பலம். தினமும் 30 கி.மீ பயணம் செய்தால் ரூ.6 அளவிலான செலவு மட்டுமே. பெட்ரோல் விலை உயர்வுக்கான புத்திசாலி மாற்றமாக ஐகியூப் மக்கள் தேர்வாகிறது.

