MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 28 கி.மீ மைலேஜ்.. பட்ஜெட் விலை குடும்பத்துக்கு ஏற்ற கார்.. இந்தியாவின் கேம் சேஞ்சர் இதுதான்

28 கி.மீ மைலேஜ்.. பட்ஜெட் விலை குடும்பத்துக்கு ஏற்ற கார்.. இந்தியாவின் கேம் சேஞ்சர் இதுதான்

1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 முதல் 28 கி.மீ வரை மைலேஜ் வழங்குவதோடு, 6 ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 11 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குடும்பங்களுக்கு சரியான கார்
Image Credit : Nexa

குடும்பங்களுக்கு சரியான கார்

இந்தியாவில் குடும்பங்களுக்கு ஏற்ற கார்கள் குறித்து தேடும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். நல்ல மைலேஜ், குறைந்த செலவு மற்றும் சுலபமாக ஓட்டக்கூடிய பராமரிப்பு ஆகியவை உள்ள கார்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், அதிக மைலேஜ் மற்றும் பல நவீன அம்சங்களுடன் சந்தையில் கவனம் ஈர்த்து வரும் எஸ்யூவி கார் ஒன்று வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாருதி சுசூகியின் தரமான கார்
Image Credit : Google

மாருதி சுசூகியின் தரமான கார்

மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது கிராண்ட் விட்டாரா கார் தற்போது குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக பேசப்படுகிறது. இந்த எஸ்யூவி கார் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பம் காரணமாக கார் இயக்கத்தில் நல்ல செயல்திறன் கிடைப்பதுடன், எரிபொருள் செலவையும் குறைக்க உதவுகிறது.

35
கிராண்ட் விட்டாரா அம்சங்கள்
Image Credit : Google

கிராண்ட் விட்டாரா அம்சங்கள்

கிராண்ட் விட்டாரா காரில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பனோராமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் வசதி, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் பயண அனுபவம் மேலும் வசதியாக இருக்கும்.

45
கிராண்ட் விட்டாரா பாதுகாப்பு அம்சங்கள்
Image Credit : x/Sunderdeep - Volklub

கிராண்ட் விட்டாரா பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் முக்கிய கவனம் பெற்றுள்ளது. 6 ஏர்பேக்கள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி புரோகிராம் (ESP), ABS உடன் EBD, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா, ஹில்-டிசெண்ட் கட்டுப்பாடு மற்றும் ISOFIX குழந்தை இருக்கை அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதனால் குடும்பத்துடன் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்ற எஸ்யூவி காராக கிராண்ட் விட்டாரா பார்க்கப்படுகிறது.

55
மாருதி கிராண்ட் விட்டாரா மைலேஜ்
Image Credit : Google

மாருதி கிராண்ட் விட்டாரா மைலேஜ்

நிறுவனம் வழங்கிய தகவலின்படி, இந்த காரின் மைலேஜ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ முதல் 28 கி.மீ வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய எஸ்யூவி வகை காராக இருந்தாலும் எரிபொருள் சிக்கனத்தில் இது முன்னிலை வகிக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.10.76 லட்சம் முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra : ஒரே சார்ஜில் 456 கி.மீ ரேஞ்ச் கொடுத்தும் வாங்க ஆளில்லை.. அதலபாதாளத்தில் மஹிந்திரா EV கார் விற்பனை!
Recommended image2
Cheapest Cars: செகண்ட் ஹேண்ட் கார் வாங்குற காசுல புது காரே வாங்கலாம்.. ஏரிஸ் முதல் செலிரியோ வரை
Recommended image3
Ampere Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.1 கூட தேவையில்லையா? 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வரும் மாடல்கள்
Related Stories
Recommended image1
பெட்ரோல் தேவையில்லை.. ஒரே சார்ஜில் 261 கி.மீ ரேஞ்ச்.. விலை தெரிந்தால் உடனே வாங்கிடுவீங்க
Recommended image2
பெண்கள் ஓட்ட எளிதான 3 ஸ்கூட்டர்கள்.. நல்ல மைலேஜ் தரும் மாடல்கள் இவைதான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved