ரூ.5.59 லட்சத்தில் டாடா XPRES அறிமுகம்.. பெட்ரோல் + CNG வேரியண்ட் விலை ரொம்ப கம்மி
டாடா மோட்டார்ஸ், ஃப்ளீட் வாடிக்கையாளர்களுக்காக புதிய XPRES காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கும் இந்த கார், குறைந்த செலவில் அதிக பயன்பாட்டை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா ஃப்ளீட் செடான்
டாடா மோட்டார்ஸ் தனது புதிய XPRES காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு வேரியண்ட்களில் வந்துள்ள இந்த கார், குறிப்பாக டாக்சி/ஃப்ளீட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்த செலவில் அதிக பயன்பாடு கிடைக்கும் வகையில் டாடா இதை திட்டமிட்டுள்ளது.
டாடா டாக்ஸி
இந்த புதிய XPRES மூலம் டாடா தனது பர்பாஸ்-பில்ட் ஃபிளீட் போர்ட் ஃபோலியோவை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. முன்பே ரசிகர்களிடையே கவனம் பெற்ற XPRES EV போலவே, இப்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களும் பெரிய சந்தையை அடைவதே நிறுவனத்தின் இலக்கு. இதன் மூலம் டாடாவின் மல்டி-பவர்டிரெய்ன் உத்தி மேலும் வலுப்பெறுகிறது.
டாடா XPRES விலை
XPRES பெட்ரோல் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.5.59 லட்சம் ஆகவும், சிஎன்ஜி வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.6.59 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கான புக்கிங் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டாடா அங்கீகரிக்கப்பட்ட ஃப்ளீட் டீலர்ஷிப்புகளில் தொடங்கியுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் Revotron எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
டாடா XPRES பெட்ரோல் மாடல்
இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அதிக கிலோமீட்டர் ஓட்டும் ஃபிளீட் பயனர்களுக்கு ஏற்ற வகையில், நம்பகத்தன்மை, நீடித்த மற்றும் குறைந்த பராமரிப்பு செலவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக, XPRES சிஎன்ஜி மாடலில் 70 லிட்டர் இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
டாடா XPRES CNG மாடல்
இது இந்த செக்மென்டில் முதல் முறையாக வரும் வசதி என்றும் டாடா கூறுகிறது. இதனால் அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் குறையும். மேலும் இதன் ஸ்மார்ட் பேக்கேஜிங் காரணமாக பூட் ஸ்பேஸ் குறையாமல் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 419 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

