- Home
- Auto
- ரூ.74 ஆயிரம் பைக் 70 கிமீ மைலேஜ் தருது.. ஒரே நாளில் 9,000 பைக் விற்பனை - எந்த மாடல் தெரியுமா?
ரூ.74 ஆயிரம் பைக் 70 கிமீ மைலேஜ் தருது.. ஒரே நாளில் 9,000 பைக் விற்பனை - எந்த மாடல் தெரியுமா?
குறைந்த விலை, அதிக மைலேஜ் மற்றும் நம்பகமான செயல்திறன் காரணமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாக இந்த பைக் உருவெடுத்துள்ளது. சுமார் 70 kmpl மைலேஜ் மற்றும் ரூ.74,000 ஆரம்ப விலையுடன் வருகிறது.

அதிக மைலேஜ் தரும் மைலேஜ் பைக்
ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் இந்தியாவில் மீண்டும் ஒரு முறை மாஸ் ஹிட் என்பதை நிரூபித்துள்ளது. 2025 டிசம்பர் மாதம் இந்த பைக் நாட்டிலேயே அதிகம் விற்பனையான மோட்டார் சைக்கிளாக மாறியுள்ளது. அதே மாதத்தில் மட்டும் சுமார் 2.8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த பைக்கை வாங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 9,000 பேர் ஸ்பிளெண்டர் பிளஸ் வாங்குகிறார்கள் என்பதே இதன் சூப்பர் பிரபலத்தைக் காட்டுகிறது.
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் விற்பனை
இந்த பைக் மிகப் பெரிய அளவில் விற்பனையாகக் காரணம், குறைந்த விலை + அதிக மைலேஜ் + அதன் நம்பகமான செயல்திறன் என்ற மூன்று பெரிய பலங்கள். இந்தியாவில் நகரம் மட்டுமல்ல கிராமப்புற மக்களிடமும் இது பல ஆண்டுகளாக ஒரு நம்பிக்கை பைக் ஆகவே இருக்கிறது. தினசரி பயணத்திற்கு குறைந்த செலவில் நல்ல பயன் தருவதால் பலர் இதைத் தேர்வு செய்கிறார்கள்.
ஸ்ப்ளெண்டர் பிளஸ் விலைரூ.74,000
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்-ன் ஆரம்ப விலை சுமார் ரூ.74,000 (எக்ஸ்-ஷோரூம்) என்று கூறப்படுகிறது. இது பல்வேறு வேரியன்ட்களிலும் மற்றும் பல கலர் ஆப்ஷன்களிலும் கிடைப்பதால், மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் மக்கள் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. விலை குறைவாக இருந்தாலும், பயன்பாட்டுக்கு தேவையான அம்சங்கள் போதுமான அளவில் தரப்படுகின்றன.
இந்தியாவில் அதிகம் விற்கும் பைக்
இந்த பைக்கில் 97.2cc ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது சுமார் 8PS பவர் மற்றும் 8Nm-க்கும் மேற்பட்ட டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் ஹீரோவின் i3S டெக்னாலஜி இருப்பதால், சிக்னலில் நிற்கும் போது எஞ்சின் தானாக ஆஃப் ஆகி, கிளட்ச் அழுத்தும் போது மீண்டும் ஸ்டார்ட் ஆகும். இதனால் பெட்ரோல் சேமிப்பு கூடுதலாக கிடைக்கிறது.
70 மைலேஜ் பைக்
முக்கியமாக ஸ்பிளெண்டர் பிளஸ் அதிகம் பேசப்படுவது அதன் மைலேஜ் காரணமாக தான். நிறுவனம் கூறும் மைலேஜ் சுமார் 70 kmpl வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கின் 9.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் மூலம், முழு டேங்கில் சுமார் 700 கி.மீ வரை செல்ல முடியும் என கணக்கிடப்படுகிறது. அனலாக் மீட்டர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப், டியூபலஸ் டயர்கள் போன்ற அடிப்படை அம்சங்களுடன், XTEC வேரியன்டில் LED ஹெட்லைட், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் போன்ற வசதிகள் உள்ளன.

