டாடா ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இந்த அம்சங்களை பார்த்தா வாங்காம இருக்க முடியாது!
டாடா மோட்டார்ஸ் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி SUV-களை புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள் பிரீமியம் அம்சங்கள், 5-நட்சத்திர பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டுடன் வருகின்றன.

டாடா ஹாரியர்
டாடா மோட்டார்ஸ் தனது முக்கியமான ICE SUV மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரியை புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாரியர் பெட்ரோல் மாடல் ரூ.12.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், சஃபாரி பெட்ரோல் ரூ.13.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் தொடங்குகிறது. இவை இரண்டும் லேண்ட் ரோவர் தொழில்நுட்பத்தில் உருவான OMEGARC பிளாட்ஃபார்மில் தான் அமைந்துள்ளது. இந்த தொடக்க விலைகள் அறிமுக காலத்திற்கானவை என்பதால், சில மாதங்களில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
டாடா புதிய கார்
இரண்டு SUV-களுக்கும் புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் Hyperion டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 170 PS பவர் மற்றும் 280 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்டர்) கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. சக்தியுடன், எரிபொருள் திறனிலும் செக்மென்டில் முன்னிலை வகிக்கும் என டாடா தெரிவிக்கிறது.
5 ஸ்டார் பாதுகாப்பு
உள்துறை வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாரியருக்கு சிக்னேச்சர் ஒய்ஸ்டர் ஒயிஸ்டர் & டைட்டன் பிரவுன் தீம், சஃபாரிக்கு கார்னிலியன் ரெட் & பிளாக் தீம் வழங்கப்பட்டுள்ளது. 36.9 செ.மீ சினிமாடிக் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், Samsung Neo OLED டெக்னாலஜி, Dolby Atmos ஆடியோ, டாஷ்கேம், Vision X IRVM, 19 இன்ச் அலாய் வீல்கள் போன்ற பல பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டாடா சஃபாரி
பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை. பெட்ரோல் மாடல்களும் Bharat NCAP-ல் முழு 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. புதிய பெட்ரோல் என்ஜின் அறிமுகம் மூலம், இந்த SUV-கள் அதிகமான வாடிக்கையாளர்களை எட்டும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. ஹாரியர் மிட்-சைஸ் SUV பிரிவிலும், சஃபாரி பிரீமியம் 7-சீட்டர் SUV பிரிவிலும் முக்கிய போட்டியாளர்களுக்கு நேரடி சவால் விடுகிறது.

