MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • வோல்க்ஸ்வேகன் ஜனவரி ஆஃபர்!.. ரூ.1.26 லட்சம் வரை தள்ளுபடி!

வோல்க்ஸ்வேகன் ஜனவரி ஆஃபர்!.. ரூ.1.26 லட்சம் வரை தள்ளுபடி!

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜனவரி மாதத்தில் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் பணத் தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ் போன்றவை அடங்கும்.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 08 2026, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
வோல்க்ஸ்வேகன் தள்ளுபடி
Image Credit : Google

வோல்க்ஸ்வேகன் தள்ளுபடி

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜனவரி மாதத்தில் தனது செடான் மற்றும் SUV மாடல்களுக்கு பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2025 மாடல் இயர் (MY2025) கார்களுக்கே இந்த சலுகைகள் பொருந்தும். பணத் தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் அல்லது லாயல்டி போனஸ், மேலும் ஸ்க்ராபேஜ் இன்சென்டிவ் என பல வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக எண்ட்ரி-லெவல் வேரியன்ட்களுக்கு அதிக நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.

வோல்க்ஸ்வேகன் Taigun SUV-யை எடுத்துக்கொண்டால், Comfortline என்ற அடிப்படை வேரியடுக்கு ரூ.1.04 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், Highline Plus AT வேரியன்டுக்கு ரூ.1 லட்சமும், GT Line AT-க்கு ரூ.80,000 அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சில உயர்ந்த வேரியன்ட்களில் ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. தற்போது Taigun காரின் விலை ரூ.11.42 லட்சம் முதல் ரூ.19.19 லட்சம் வரை உள்ளது. இந்த மாதலுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஃபேஸ்லிப்ட் அப்டேட் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

22
வோல்க்ஸ்வேகன் சலுகை
Image Credit : Google

வோல்க்ஸ்வேகன் சலுகை

மேலும், வோல்க்ஸ்வேகன் Virtus செடானுக்கும் ஜனவரி மாத சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. Virtus Comfortline MT வேரியண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.26 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. Highline Plus AT-க்கு ரூ.1 லட்சமும், GT Line AT-க்கு ரூ.80,000 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. GT Plus Chrome DSG மற்றும் GT Plus Sport DSG போன்ற உயர்ந்த வேரியன்ட்களுக்கு ரூ.30,000 வரை எக்சேஞ்ச் போனஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

Virtus மாடலில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு தற்போது எந்த சலுகையும் இல்லை. இந்த செடான், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக உள்ளார். Virtus காரின் தற்போதைய விலை ரூ.11.20 லட்சம் முதல் ரூ.18.78 லட்சம் வரை உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் Virtus-க்கும் ஃபேஸ்லிப்ட் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
குறைந்த விலையில் 7 சீட்டர் கார்.. குடும்ப கார் மார்க்கெட்டில் Nissan சூப்பர் எண்ட்ரி
Related image2
கார் முதல் டிராக்டர் வரை… மக்கள் அதிகம் வாங்கி குவித்த வாகனம் எது தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஃபோக்ஸ்வாகன்
குறைந்த விலை கார்
ஆட்டோ
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி.. மார்ச் 31க்கு முன் வாங்கினால் பெரிய லாபம்
Recommended image2
50,000 பேரை வேலையில் இருந்து தூக்கும் கார் நிறுவனம்.. இதுதான் காரணம்!
Recommended image3
TVS-ன் சீப் அண்ட் பெஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்; விலை 50 ஆயிரத்துக்கும் கம்மியாம்...!
Related Stories
Recommended image1
குறைந்த விலையில் 7 சீட்டர் கார்.. குடும்ப கார் மார்க்கெட்டில் Nissan சூப்பர் எண்ட்ரி
Recommended image2
கார் முதல் டிராக்டர் வரை… மக்கள் அதிகம் வாங்கி குவித்த வாகனம் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved