பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா? பைக் வாங்க ரூ.20000 மானியம்! தமிழக அரசின் அடடே அறிவிப்பு
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைத் தொடர்ந்து அதிகப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி இதனை வளர்த்து வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை, மானியம் உள்ளிட்ட சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

நீண்ட பயணத்திற்கு ஏற்ற ஸ்கூட்டர்
அந்த வகையில் தமிழக அரசும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி மின்சார வாகனங்களுக்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2025 - 26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக் கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
குறைந்த விலையில் மின்சார ஸ்கூட்டர்
எல்லார்க்கும், எல்லாம் என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 45 உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நிதி ஒதுக்கீடு, ரூ.100 கோடியில் சென்னையில் அறிவியல் மையம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்க மானியக்கடன், பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு 1 சதவீதம் வரி விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மானிய விலையில் மின்சார ஸ்கூட்டர்
அந்த வகையில் தற்சார்பு தொழிலாளர்களில் 2000 நபர்களுக்கு மின்சார வாகனம் வாங்க தலா ரூ.20000 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்சார்பு தொழிலாளர்கள் தங்கள் தொழிலை விரைவில் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.