MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car Dashboard Lights: டிரைவர்ஸ் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. காரின் டேஷ்போர்டில் இந்த லைட் எரிஞ்சா உடனே வண்டியை நிறுத்துங்க! ஆபத்தான 7 வார்னிங்!

Car Dashboard Lights: டிரைவர்ஸ் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. காரின் டேஷ்போர்டில் இந்த லைட் எரிஞ்சா உடனே வண்டியை நிறுத்துங்க! ஆபத்தான 7 வார்னிங்!

Dangerous Warnings: காரின் டேஷ்போர்டு விளக்குகள் டிராஃபிக் சிக்னல் போன்ற குறியீட்டு நிறங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறது. ஆனால் இதனை ஓட்டுநர் கண்டுகொள்வதில்லை. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 18 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டேஷ்போர்டு லைட் கலர்ஸ் என்ன சொல்லுது?
Image Credit : Asianet News

டேஷ்போர்டு லைட் கலர்ஸ் என்ன சொல்லுது?

சிவப்பு (Red) - மிக ஆபத்தானது:

இது உடனடிப் பேராபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை. இன்ஜின் ஆயில் தீர்ந்து போவது, பிரேக் செயலிழப்பு அல்லது இன்ஜின் ஓவர் ஹீட் போன்ற கடுமையான பாதிப்புகளின் போது இது எரியும். இந்த லைட் எரிந்தால் காரை உடனடியாகப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அணுக வேண்டும்.

மஞ்சள் அல்லது ஆரஞ்சு (Amber) - எச்சரிக்கை:

இது காரில் ஏதோ ஒரு கோளாறு ஆரம்பித்துள்ளது என்பதைக் குறிக்கும் சிக்னல். காரை தொடர்ந்து ஓட்டலாம் என்றாலும், விரைவில் சர்வீஸ் சென்டருக்குச் சென்று சரி பார்ப்பது அவசியம்.

பச்சை அல்லது நீலம் (Green/Blue) - தகவல்:

இது எந்தப் பிரச்னையையும் குறிப்பதில்லை. மாறாக, ஹெட்லைட் ஆன் செய்யப்பட்டுள்ளதா, க்ரூஸ் கண்ட்ரோல் வேலை செய்கிறதா போன்ற சில வசதிகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கார் ஓட்டுநர்கள் அடிக்கடி பார்க்கும் 7 முக்கிய வார்னிங் லைட்ஸ்
Image Credit : Asianet News

கார் ஓட்டுநர்கள் அடிக்கடி பார்க்கும் 7 முக்கிய வார்னிங் லைட்ஸ்

* செக் இன்ஜின் லைட் (Check Engine Light)

இன்ஜின் அல்லது புகையை வெளியிடும் எமிஷன் சிஸ்டத்தில் ஏதோ கோளாறு இருப்பதை இது காட்டுகிறது. சில நேரங்களில் காரின் எரிபொருள் மூடி சரியாக மூடப்படாமல் இருந்தாலும் இந்த லைட் எரியக்கூடும்.

* ஆயில் பிரஷர் லைட் (Oil Pressure Light)

இன்ஜினின் சீரான இயக்கத்திற்குத் தேவையான ஆயில் கிடைக்கவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இன்ஜின் ஆயில் லெவல் குறைந்தாலோ அல்லது ஆயில் பம்ப்பில் பழுது ஏற்பட்டாலோ இந்த விளக்கு எரியும்.

* கூலன்ட் டெம்பரேச்சர் லைட் (Coolant Temperature Light)

காரின் இன்ஜின் வழக்கத்தை விட அதிகமாகச் சூடாகிறது என்பதை இது எச்சரிக்கிறது. ரேடியேட்டரில் கோளாறு அல்லது கூலன்ட் திரவம் லீக் ஆவதால் இது நிகழலாம். இந்த லைட் எரிந்தால் உடனே வண்டியை நிறுத்தி இன்ஜினை குளிர வைக்க வேண்டும்.

Related Articles

Related image1
E20 Petrol: வண்டில E20 பெட்ரோல் போட்டா இன்ஷூரன்ஸ் கிடைக்காதா? ICICI விளக்கமும், சிக்கலும்!
Related image2
Kawasaki Ninja : நிஞ்ஜா பைக்குகளுக்கு ரூ. 2.89 லட்சம் வரை தள்ளுபடி! கம்மி விலையில் கனவு பைக்!
34
மேலும் சில முக்கிய எச்சரிக்கை விளக்குகள்
Image Credit : Asianet News

மேலும் சில முக்கிய எச்சரிக்கை விளக்குகள்

பேட்டரி வார்னிங் லைட் (Battery Warning Light)

காரின் பேட்டரி, ஆல்டர்னேட்டர் அல்லது சார்ஜிங் சிஸ்டத்தில் ஏதோ குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இதை கவனிக்காமல் விட்டால், அடுத்த முறை காரை ஸ்டார்ட் செய்யும்போது ஸ்டார்ட் ஆகாமல் போகலாம்.

பிரேக் வார்னிங் லைட் (Brake Warning Light)

பிரேக் ஆயில் குறைந்தாலோ அல்லது பிரேக் சிஸ்டத்தில் ஒட்டுமொத்தமாக ஏதேனும் குறைபாடு இருந்தாலோ இது எரியும். பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்பதால் உடனே கவனிக்க வேண்டும்.

டயர் பிரஷர் லைட் (TPMS)

காரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டயர்களில் காற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. காற்றழுத்தம் குறைந்தால் மைலேஜ் குறைவதோடு, டயர் வெடிக்கும் அபாயமும் உள்ளது.

ஏபிஎஸ் லைட் (ABS Light)

காரின் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் சரியாக இயங்கவில்லை என்பதை இது குறிக்கிறது. சாதாரண பிரேக் வேலை செய்யும் என்றாலும், அவசர காலங்களில் பிரேக் பிடிக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம்.

44
மற்ற சில முக்கிய எச்சரிக்கை விளக்குகள்
Image Credit : Asianet News

மற்ற சில முக்கிய எச்சரிக்கை விளக்குகள்

ஏர்பேக் லைட் (Airbag Warning): விபத்தின் போது பாதுகாக்கும் ஏர்பேக் சிஸ்டத்தில் கோளாறு உள்ளது. பவர் ஸ்டீயரிங் லைட் (Power Steering Warning): ஸ்டீயரிங் திருப்புவது கடினமாக மாறலாம். ஃபியூயல் லைட் (Fuel Warning): பெட்ரோல் அல்லது டீசல் தீரப்போகிறது, உடனே நிரப்ப வேண்டும். டோர் ஓபன் லைட் (Door Open Warning): காரின் கதவு சரியாக மூடப்படவில்லை. சீட் பெல்ட் ரிமைண்டர் (Seat Belt Reminder): பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
கார் செய்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata Motors: டாடா வாகனங்களின் விலை உயருகிறது.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எந்தெந்த மாடல்கள்?
Recommended image2
Kawasaki Ninja : நிஞ்ஜா பைக்குகளுக்கு ரூ. 2.89 லட்சம் வரை தள்ளுபடி! கம்மி விலையில் கனவு பைக்!
Recommended image3
Suzuki XL7 Facelift : சுசூகி வெளியிட்ட டீசர்! மாருதி XL6 ஃபேஸ்லிஃப்ட்டில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!
Related Stories
Recommended image1
E20 Petrol: வண்டில E20 பெட்ரோல் போட்டா இன்ஷூரன்ஸ் கிடைக்காதா? ICICI விளக்கமும், சிக்கலும்!
Recommended image2
Kawasaki Ninja : நிஞ்ஜா பைக்குகளுக்கு ரூ. 2.89 லட்சம் வரை தள்ளுபடி! கம்மி விலையில் கனவு பைக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved